நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் நிதிஷ் ரெட்டி 4 இன்னிங்ஸ்களில் 71 ரன்கள் எடுத்ததுடன், 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அவரது செயல்பாடு சிறப்பாக இருந்தாலும், ஷிவம் துபேவின் அனுபவத்தையும் பெரிய போட்டிகளில் அவர் அளித்த பங்களிப்பையும் மறந்துவிட முடியாது.
மேலும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் என இரண்டு பெரிய தொடர்களில் சிவம் தூபேவுக்கு வாய்ப்பை இந்திய அணி நிர்வாகம் வழங்கவில்லை. மேலும் இந்த குறிப்பிடத்தக்கது இரண்டு தொடர்களிலும் நிதிஷ்குமார் ரெட்டி சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்தச் சூழ்நிலையில், ஷிவம் துபே குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கிய விஷயங்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும்போது, நிதிஷ் ரெட்டி சிறப்பாகச் செயல்பட்டதை ஒப்புக்கொண்டாலும், ஷிவம் துபே ஒரு நிரூபிக்கப்பட்ட ஃபினிஷர் என்று குறிப்பிட்டுள்ளார். 2024 மற்றும் 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிகள், 2025 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப்போட்டியிலும் துபே முக்கியமான ரன்களைச் சேர்த்துள்ளார். எனவே, அவரை இந்திய அணியிலிருந்து முற்றிலுமாக ஓரங்கட்டினால் தான் ஆச்சரியப்படுவேன் என்பதே ஆகாஷ் சோப்ராவின் கருத்தாகும்.

