செருப்பை கழற்றி எரியும் ரசிகர்கள்.. ஹர்திக் பாண்டியா மீது இவ்வளவு கோவமா.?. வைரலாகும் வீடியோ

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சூடுபிடிக்க தொடங்கி தற்போது எட்டு ஆட்டங்கள் வரை நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் சென்னை அணி பங்கு பெற்ற இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இதில் மற்றொரு வெற்றிகரமான அணியாகக் கருதப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி தான் பங்குபெற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி தற்போது புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் நீடிக்கிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு மிகவும் வலிமையாகக் கருதப்பட்ட மும்பை அணி ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறைபாடுகளால் தற்போது சிக்கலில் நீடிக்கிறது.

- Advertisement -

எப்போது ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு குஜராத் அணியில் இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு மாற்றப்பட்டு கேப்டனாக அறிவிக்கப்பட்டாரோ அப்போதிருந்தே மும்பை அணி நிர்வாகத்திற்கும், அணி வீரர்களுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது.

- Advertisement -

குஜராத் அணியில் இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை அணிக்கு நிர்வாகம் அழைத்த போது கேப்டன் பதவி கொடுத்தால் வருகிறேன் என்று கூறியிருப்பதாகவும் மும்பை அணி நிர்வாகமும் ரோகித் சர்மாவுக்கு தற்போது வயது ஆவதால் எதிர்காலம் கருதி அவரை கேப்டனாக நியமித்ததாகவும் ஒரு தகவல் வருகிறது. அணியில் ஏற்கனவே பும்ரா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய அனுபவ வீரர்கள் இருப்பினும் குஜராத் அணியில் இருந்த வீரரை அழைத்து வந்து கேப்டன் பதவி கொடுத்தது அணி வீரர்களுக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது.

இது ஒரு பக்கம் இருக்க ஹர்திக் பாண்டியா செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் மைதானங்களில் அவருக்கு எதிராக கரகோஷம் எழுப்பி வருகின்றனர். காரணம் மும்பை அணிக்கு கேப்டனாக இருந்து ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை ஹர்திக் பாண்டியா அரசியல் செய்து கேப்டன் பதவியை பறித்துக் கொண்டார் என்று ரசிகர்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் பொது இடம் ஒன்றில் பெரிய திரையில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் போட்டி ஒன்று ஒளிபரப்பப்பட்டு இருக்கிறது. அதில் மும்பை அணி தோல்வியை தழுவியதும் அணியின் கேப்டன் ஹார்த்திக் பாண்டியா தோல்விக்கான காரணம் குறித்து விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் கோபம் அடைந்து ஹர்திக் பாண்டியா பேசிக் கொண்டிருந்த திரையின் மீது தங்களது செருப்பை கழற்றி எரிந்தனர். மேலும் அங்கிருந்த சேர்களை தூக்கி வீசியும் தங்கள் கோபத்தினை வெளிப்படுத்தினார்கள்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாக இந்திய ரசிகர்களுக்கு வெளிநாட்டு வீரர்கள் மேல்தான் கோபம் வரும். ஆனால் தற்போது சொந்த நாட்டு வீரர் மேலேயே ரசிகர்கள் கோபமாக இருப்பது அரிதாக இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles