எந்த டீமா இருந்தாலும் என்னோட திட்டம் இதுதான்.. டிராவிஸ் ஹெட்டும் இததான் சொன்னாரு.. ஆட்டநாயகன் விருது பெற்ற அபிஷேக் ஷர்மா

ஐபிஎல் 17வது சீசனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. பேட்டிங்கிற்கு சாதகமான இந்த ஆடுகளம் இரண்டு அணிகளுக்குமே ரன்களை குவிப்பதில் மிகவும் உதவியாக இருந்தது.

- Advertisement -

ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. மயங்க் அகர்வாலை தவிர களத்தில் இறங்கி ஹைதராபாத் அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் ரன்களை குவித்தனர். டிராவிஸ் ஹெட் 62 ரன்களும், அபிஷேக் ஷர்மா 63 ரன்களும், மார்க்ரம் 42 ரன்களும், கிளாசன் 80 ரன்கள் குவித்தனர்.

- Advertisement -

கடந்த உலகக் கோப்பையில் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்த இந்தியாவிற்கு வில்லனாக விளங்கிய டிராவிஸ் ஹெட் இந்த போட்டியில் மும்பை அணிக்கு வில்லனாக விளங்கினார்.
முதல் போட்டியில் களமிறங்காத இவர் இரண்டாவது போட்டியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஹைதராபாத் அணிக்கு அதிரடி தொடக்கம் இவர் மூலம் அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

- Advertisement -

24 பந்துகளில் 9 பௌண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் என்று விளாசி 62 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்த அபிஷேக் ஷர்மா இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 16 பந்துகளிலேயே அரை சதத்தினை கடந்தார். மும்பை அணியின் பந்துவீச்சை பாரபட்சமின்றி நாலாப்புறமும் சிதறடித்த இவர் 23 பந்துகளிலேயே மூன்று பவுண்டரிகள், ஏழு சிக்ஸர்கள் என்று 63 ரன்கள் விளாசினார்.

பின்னர் இறுதிக்கட்ட பேட்ஸ்மேன்கள் அதிரடியால் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 277 ரன்கள் குவித்தது. இதனை சரி செய்ய முயற்சி செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 246 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. ஆட்டநாயகன் விருது பெற்ற அபிஷேக் ஷர்மா கூறுகையில்
“நான் முந்தைய பேட்டியில் பேசியதை போல் உள்ளூர் போட்டிகளில் விளையாடியதன் மூலம் நான் மிகுந்த நம்பிக்கை அடைந்தேன். நான் எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சொல்லிக் கொள்வது ஒன்றுதான் களத்தில் இறங்குங்கள் அதிரடியாக விளையாடி உங்களை வெளிப்படுத்துங்கள்.

- Advertisement -

என்னுடைய முதல் திட்டமே அடித்து ஆடுவதுதான். ட்ராவிஸ் ஹெட்டுடன் பார்ட்னர்ஷிப் அமைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் என்னிடம் பந்து உன்னுடைய ஏரியாவில் இருந்தால் எதையும் யோசிக்காமல் அடித்து விடு என்று கூறினார். நான் அணியில் எந்த இடத்தில் இறங்கி விளையாடுகிறேன் என்பது முக்கியம் இல்ல வாய்ப்பு கிடைத்ததை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். முந்தைய நாள் இரவு பிரைன் லாராவிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.

நான் நெட்ஸில் பேட்டிங் செய்வதை விட பந்து வீசுவதே அதிகம் விரும்புகிறேன். பந்து வீச்சிலும் என்னுடைய சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்துவேன்” என்று கூறி இருக்கிறார். முதல் போட்டியில் பெற்ற தோல்விக்கு தன் சொந்த மைதானத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றிருக்கிறது. அதே வேளையில் இரண்டு போட்டியிலும் தோல்வியை அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது பரிதாப நிலையில் இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles