இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அபிஷேக் ஷர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
மேலும் இந்த தொடரின் மூலமாக அபிஷேக் சர்மா விராட் கோலியின் சாதனையை முறியடித்து இருக்கிறார்.
கடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அறிமுகத்தொடரில் சதம் அடித்து அசத்திய அபிஷேக் ஷர்மா அதற்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் சதம் அடித்து சிறப்பான சாதனை படைத்தார். மேலும் இந்தத் தொடரில் ஒரு அரை சதம் அடித்திருந்த நிலையில் மொத்தமாக 5 டி20 போட்டிகளில் 279 ரன்கள் அபிஷேக் ஷர்மா அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலமாக ஒரே டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த விராட் கோலியின் சாதனையை அபிஷேக் ஷர்மா முறியடித்திருக்கிறார். மேலும் ஒட்டுமொத்தமாக ஒரு டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக கடந்த ஆண்டு வரை விராட் கோலி இருந்தார். திலக் வர்மா விராட் கோலியின் சாதனையை கடந்த ஆண்டு முறியடித்த நிலையில் அபிஷேக் சர்மா இந்தப் பட்டியலில் விராட் கோலியின் சாதனையை முறியடித்திருக்கிறார்.
அபிஷேக் ஷர்மா ஒட்டுமொத்தமாக ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 279 ரன்கள் குவித்திருக்கிறார். முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு விராட் கோலி இதே ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மொத்தமாக 231 ரன்கள் குவித்திருந்தார். இதுவே தற்போதைய இங்கிலாந்து தொடர் வரை அதிகபட்ச ரன்னாக இருந்தது. இப்போது அந்த சாதனையை அபிஷேக் ஷர்மா முறியடித்து இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை செய்திருக்கும் அபிஷேக் ஷர்மா ஒட்டுமொத்தமாக டி20 தொடரில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
இதையும் படிங்க:கெயில் டிவில்லியர்ஸ் மாதிரி அபிஷேக் ஷர்மா ஆடுனாரு.. இதுக்கு முன்னாடி இப்படி ஒரு இன்னிங்ஸ் பார்த்ததே இல்லை – இங்கிலாந்து கோச் புகழாரம்
இந்தப் பட்டியலில் திலக் வர்மா முதலிடத்தில் இருக்கிறார். கடந்த ஆண்டு திலக் வர்மா தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 280 ரன்கள் குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அபிஷேக் ஷர்மா கடந்த போட்டியில் 13 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக சர்வதேச டி20 போட்டி ஒன்றில் அதிக சிக்ஸ் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

