தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் லீக் சுற்று முடிவை எட்டி வரும் நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இதில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் கேப்டனாக திகழ்கிறார்கள். சன்ரைசர்ஸ் அணியை பொருத்தவரை பேட் கம்மின்ஸ் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு தனது அணியை பிளே ஆப் சுற்றுக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் இந்த ஐபிஎல் இல் சிறந்த கேப்டனை தேர்வு செய்திருக்கிறார்.
17ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை பொறுத்தவரை மூன்று வெளிநாட்டு வீரர்களை தவிர அனைவருமே இந்திய கேப்டனாகவே உள்ளனர். சன்ரைசர்ஸ் அணிக்கு கம்மின்ஸ் கேப்டனாக இருக்கிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பொறுத்தவரை பாப் டு பிளசிஸ் கேப்டனாக இருக்கிறார். தொடக்கத்தில் தோல்விகளை சந்தித்த அவர் அதன் பிறகு ஐந்து தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று தற்போது பிளே ஆப் ரேஸில் இருக்கிறார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேப்டனாக செயல்பட்டு வந்த சிகார் தவான் காயம் காரணமாக வெளியேற, அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியைச் சேர்ந்த இளம் வீரர் சாம் கரண் கேப்டன் பொறுப்பை ஏற்று வழி நடத்தினார். இவர்கள் மூவரை தவிர மற்ற அனைவருமே இந்திய இளம் வீரர்கள் ஆவர். அதில் சாம்சன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன.
இது குறித்து ஐபிஎல்லில் ல் சிறந்த கேப்டன் யார் என்பதை தேர்வு செய்த தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயரை குறிப்பிடுகிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பொறுப்பில் இந்த அளவு நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவர் மீது நிறைய சந்தேகங்கள் எனக்கும் இருந்தது. ஆனால் அனைத்தையும் முறியடிக்கும் வகையில் அவர் ஒரு புத்திசாலி கேப்டனாக இருந்துள்ளார்.
அவரது நடவடிக்கையை நான் விரும்புகிறேன். கொல்கத்தாவில் அதுவும் ஈடன் கார்டன் மைதானத்தில் பீதி அடையாமல் கேப்டன் பொறுப்பை ஏற்று வழி நடத்துவது என்பது பெரிய விஷயம். மேலும் கரீபியன் சீனியர் வீரர்களான ஆன்ட்ரே ரசல் மற்றும் சுனில் நரேன் ஆகியோருக்கு கேப்டனாக இருப்பது மிகப் பெரிய விஷயம். ஏனென்றால் அவர்கள் எதையுமே மறைக்காமல் வெளிப்படையாக பேசக்கூடிய கலாச்சாரத்தை கொண்டிருப்பவர்கள்.
இதையும் படிங்க:மாறிவரும் வானிலை மாற்றம்.. சென்னை அணிக்கு உருவாகும் சிக்கல்.. உற்சாகத்தில் ஆர்சிபி ரசிகர்கள்.. ஏன் தெரியுமா.?
இப்படி வேறு கலாச்சாரத்தை கொண்டு வயதில் மூத்த வீரர்களை ஒருங்கிணைத்து வழிநடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதனை ஸ்ரேயாஸ் இந்த இளம் வயதில் அற்புதமாக செய்து வருகிறார். எனவே அவர்தான் இந்த ஐபிஎல் சிறந்த கேப்டன்” என்று டிவிலியர்ஸ் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

