மாறிவரும் வானிலை மாற்றம்.. சென்னை அணிக்கு உருவாகும் சிக்கல்.. உற்சாகத்தில் ஆர்சிபி ரசிகர்கள்.. ஏன் தெரியுமா.?

17வது ஐபிஎல் சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில் நாளை நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மழை வாய்ப்பு குறைந்து இருப்பதால் ஆர்சிபி ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு அதிகரித்து இருக்கிறது.

- Advertisement -

பிளே ஆப் சுற்றுக்கு ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் ஏற்கனவே முன்னேறி விட்ட நிலையில், நான்காவது அணியை தீர்மானிக்கப் போகும் போட்டி நாளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. மே 18ஆம் தேதி அன்று நடைபெறும் இப்போட்டியில் மழை பெய்ய 90 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

- Advertisement -

போட்டியின் போது ஒருவேளை மழை வந்தால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே ஏழு வெற்றிகளை பெற்று 14 புள்ளிகள் கொண்டிருக்கும் நிலையில், ஒரு புள்ளி கூடுதலாக 15 புள்ளிகள் என பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். அதுவே பெங்களூர் அணியை பொறுத்தவரை ஏற்கனவே ஆறு வெற்றிகளை பெற்று 12 புள்ளிகள் பெற்றிருக்கும் நிலையில் உள்ளது.

- Advertisement -

பெங்களூர் அணிக்கு ஒரு புள்ளி கூடுதலாக கிடைத்தால் 13 புள்ளிகள் என ப்ளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறும் வாய்ப்பு உருவாகும். இதன் காரணமாக பெங்களூர் அணி ரசிகர்கள் மழை வரக்கூடாது என பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விட்டனர். அவர்களின் வேண்டுதலோ என்னவோ அதற்கு ஏற்றவாறு பெங்களூர் அணியின் வானிலை தற்போது மாறி உள்ளது.

இன்று காலை முதல் பெங்களூர் நகரத்தில் நன்றாக பெய்து கொண்டிருந்த மழை தற்போது குறைந்துள்ளதாகவும் பல இடங்களில் மட்டும் சாரல் மழை பெய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் போட்டி நடைபெற இருக்கிற நாளை மழையின் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் மேலும் மழை பெய்ய 90 சதவீதத்திலிருந்து 36 சதவீதத்திற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

- Advertisement -

இதன் காரணமாக மழை பெய்யவில்லை என்றால் போட்டி முழுவதுமாக நடைபெறும். அப்போது எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு உருவாகும். தற்போது சென்னை அணியை விட பெங்களூர் அணி பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது.

இதையும் படிங்க:ஹலோ பாஸ்.. ஒரு டீ கிடைக்குமா?. ஆர்சிபி ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் சர்ப்ரைஸ் விசிட் அடித்த தோனி.. ட்ரெண்டிங் ஆகும் வீடியோ

இந்த சூழ்நிலையில் போட்டி முழுவதுமாக நடைபெற்றால் பெங்களூர் அணி சூப்பர் கிங்ஸ் அணியை நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்று ஆர்சிபி ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் இருக்கின்றனர். இதனால் நாளை நடைபெற உள்ள போட்டி இரண்டு அணிகளுக்குமே மிக முக்கியமானதாகும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles