பையன் தோனி வெறியனாவே மாறிட்டான்.. தோனி பத்தி பேசுறது நிறுத்தவே மாட்டேங்குறான்.. பிரவீஸ் குறித்து டிவிலியர்ஸ் உற்சாகம்

19ஆவது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா இன்னும் சில வாரங்களில் துவங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு விட இந்த முறை மிகவும் வலுவான நிலையில் களமிறங்க உள்ளது. இதில் கடந்த ஆண்டு பாதியில் சென்னை அணிக்கு வாங்கப்பட்ட தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டெவால்ட் பிரவீஸ் சிஎஸ்கே அணியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

- Advertisement -

அதுவரை பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத சென்னை அணி இவரது வருகைக்குப் பிறகு அதிரடியான ஆட்டத்தை விளையாட ஆரம்பித்தது. இதன் காரணமாகவே போட்டியில் தோல்வி அடைந்தாலும் இவரது அதிரடி ஆட்டத்தை காண ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்த சூழ்நிலையில் மற்றொரு தென்னாப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் ஆன டிவிலியர்ஸ் பிரவிஸ் இடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் தோனி குறித்து பேசுவதை நிறுத்தவே இல்லை என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “கடந்த ஐபிஎல் சீசன் முடிந்த பின்னர் நான் பிரவீஸ் இடம் பேசினேன். அவரால் தோனியை பற்றி பேசுவதை நிறுத்தவே முடியவில்லை. தோனி அவருக்குள் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் விளையாட்டை பற்றி சிந்திக்கும் விதம் என்று அனைத்தையும் பெருமையாக பேசினார். இப்படிப்பட்ட ஒரு நபர் தோனி போன்ற ஒரு நபர் நம்முடன் இருப்பது சிறப்பானது” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles