ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்னும் சில தினங்களில் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் விராட் கோலி குறித்து ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
பெங்களூர் அணியை பொறுத்தவரை இந்த ஆண்டு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்து அதிரடியான வீரர்களை தேர்வு செய்துள்ளது. குறிப்பாக பெங்களூர் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் நிலையில் அதிரடியாக ஆடக்கூடிய வீரர்களை முதன்மையாக தேர்வு செய்துள்ளது. இதில் குறிப்பாக தொடக்க வீரர் பில் சால்ட், மிடில் வரிசை பேட்ஸ்மேன் லிவிங்ஸ்டன், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட் உள்ளிட்ட அதிரடி வீரர்களை தேர்வு செய்துள்ளது.
அதேபோல பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து புவனேஸ்வர் குமார், ஹாசில் வுட் போன்ற தரமான வீரர்களையும் தேர்வு செய்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி செய்ய வேண்டிய வேலை குறித்து சில முக்கிய விஷயங்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த முறை விராட் கோலியின் மீது இருக்கும் அழுத்தத்தை தொடக்க வீரர் பில் சால்ட் எடுத்து விடுவார் என்று நம்புகிறேன். ஏனென்றால் அவர் ஆரம்பத்தில் இருந்து அதிரடியாக விளையாட கூடிய ஒரு வீரர். மேலும் தற்போது இருக்கும் பெங்களூர் அணியை எடுத்து பார்த்தால் பெரும்பாலான வீரர்கள் அதிரடி ஆட்டத்தை இயல்பாகவே விளையாடக்கூடிய அளவில் இருக்கிறார்கள். இவர்கள் சாதாரணமாகவே அதிரடி ஆட்டம் விளையாடுவதில் கைதேர்ந்தவர்கள்.
இதையும் படிங்க:43 வயசுல கூட எப்படி இவ்ளோ பிட்டா இருக்கீங்க.? ஹர்பஜன் சிங் கேட்ட கேள்வி.. எம்எஸ் தோனி கூறிய அட்டகாசமான பதில்
அதிரடி வீரர்கள் இருப்பதால் விராட் கோலி ஒரு முனையில் நின்று பொறுமையாக விளையாடிய விக்கெட் சரிவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர் முன்பு போலவே தனது ஆங்கர் ரோலை செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலமாக பல இடங்களில் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும். விராட் கோலி புத்திசாலித்தனமாக இந்த அணுகுமுறைக்கு மாற வேண்டும்” என்று டிவில்லியர்ஸ் கூறியிருக்கிறார்.

