சஷாங்க் சிங் வாழ்க்கையும், சூர்யகுமார் யாதவ் வாழ்க்கையும் ஒன்றுதான்.. அசுதோஸ் சர்மா இப்போது தடுமாற ஆரம்பித்திருக்கிறார்.. கூறுகிறார் ஆகாஷ் சோப்ரா

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

- Advertisement -

பஞ்சாப் அணி இந்த முறையும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் 12 போட்டிகளில் வெறும் நான்கு போட்டிகள் மட்டும் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது. ஆனால் பஞ்சாப் அணியில் கவனிக்கப்படக்கூடிய வீரராக இருக்கும் சஷாங்க் சிங் குறித்து ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது பஞ்சாப் அணிக்கு சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் சசாங்க் சிங்கை பொருத்தவரை அவரது ஐபிஎல் வாழ்க்கை என்பது பஞ்சாப் அணி அவரது பெயரில் வேறு வீரரை வாங்க முயற்சித்து தவறுதலாக இவரை வாங்கி விட்டது. ஆனால் வாங்க முயற்சித்த வீரர் கூட இந்த அளவு சிறப்பாக பஞ்சாப் அணிக்கு விளையாடி இருப்பாரா? என்பது சந்தேகம்தான்.

- Advertisement -

அந்த அளவு மனிதர் இந்த ஆண்டு தனது முத்திரையை பதித்திருக்கிறார். பஞ்சாப் அணி போட்டியில் தோல்வி அடைந்தாலும் இவரது பேட்டிங் மட்டும் அசத்தும்படி அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு போட்டிகளில் இறுதிவரை பஞ்சாப் அணி வந்து தோல்வி அடைந்திருப்பது சோகமே. ஆனால் இவரது வாழ்க்கையும் சூரியகுமார் யாதவின் கிரிக்கெட் வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒரு சேரவே அமைந்திருக்கிறது.

சூரியகுமார் யாதவும் கிட்டத்தட்ட 30 வயதை நெருங்கிய நிலையில்தான் இந்திய அணிக்கு நுழைந்திருக்கிறார். மும்பை அணிக்கு வந்த பிறகுதான் அவரது முழு திறமையும் வெளிவந்திருக்கிறது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவிக்கும்போது
“இன்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடக்கூடிய பஞ்சாப் அணியில் முக்கிய இரு வீரர்களை எடுத்துக் கொண்டால் அதில் சசாங்க் சிங் முதல் வீரராக இருப்பார். ஏனெனில் அவர் மிகத் திறமையான வீரர். அவர் பேட்டிங் செய்யும்போது முழு கவனமும் அவர் மீது மட்டுமே இருக்கும்.

- Advertisement -

அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்வதற்கான காலம் விரைவில் வரும். அவருக்கு வயது தற்போது 22 அல்லது 25 இல்லை. அவர் 30 வயதை கடந்த ஒரு சீனியர் வீரர். அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி நிறைய அனுபவங்களை வைத்திருக்கிறார். ஆனால் வெளியே வளர்வதற்கான நேரம் இப்போதுதான் அவருக்கு வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அவரும் சூரியகுமார் யாதவும் ஒருசேர தான் இருக்கிறார்கள். இவர் ஒரு சின்ன சூரியகுமார் யாதவாக இருக்கிறார்.

இதையும் படிங்க:இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு இல்லைனு தானே சொன்னீங்க.. இப்போ என்ன ஆச்சு.. ஜெய்ஷா மீது கோபத்தில் பிரீத்தி ஜிந்தா

அடுத்ததாக ஒரு வீரரை யோசிக்க வேண்டும் என்றால் அதில் அசுத்தோஸ் சர்மா இருப்பார். அவர் இந்த சீசனில் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவரது வழியில் ஆக்ரோஷமான பாணியை கடைப்பிடித்து விளையாட கொண்டிருந்தபோது அவருக்கு ஷார்ட் பிட்ச் பந்துகள் வீசப்பட்டன. இதனால் இப்போதுதான் அவர் தடுமாறு ஆரம்பித்திருக்கிறார். என்று கூறி இருக்கிறார்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles