இவர் இப்ப நல்லா பவுலிங் பண்ணாலும் டி20க்கு சரிப்பட்டு வர மாட்டார் அப்படின்னு நினைக்கிறேன் – இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்!

இந்திய ஆண்கள் டி20 கிரிக்கெட் அணி தற்பொழுது காயத்தில் இருந்து மீண்டும் வந்திருக்கும் ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையில் அயர்லாந்து அணிக்கு எதிராக அயர்லாந்து மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது!

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று இந்திய கேப்டன் பும்ரா பந்துவீச்சை முதலில் தேர்ந்தெடுத்தார். இந்திய அணியில் இளம் இடது கை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் மற்றும் காயத்தில் இருந்து திரும்ப வந்திருக்கும் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இருவரும் அறிமுகமானார்கள்.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியின் முதல் ஐந்து விக்கெட்களை பும்ரா இரண்டு, பிரசித் கிருஷ்ணா இரண்டு, ரவி பிஷ்னோய் ஒன்று என 31 ரன்கள் எடுத்து பகிர்ந்து கொண்டார்கள். இதற்குப் பிறகு எட்டாவது ஆக வந்த மெக்கார்தி அரை சதம் அடிக்க அந்த அணி 139 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இந்தப் போட்டியில் காயத்தில் இருந்து திரும்ப வந்த பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரது பந்துவீச்சும் மிக நன்றாக இருந்தது. பும்ரா நான்கு ஓவர்களுக்கு 24 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணா நான்கு ஓவர்களுக்கு 32 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” நேற்று இந்திய அணியில் இரண்டு வீரர்களுக்கு அறிமுகம் நடந்தது. ஒருவர் ரிங்கு சிங் மற்றொருவர் பிரசித் கிருஷ்ணா. பிரசித் கிருஷ்ணா இதுவரை டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பும்ரா திரும்பி வந்ததற்கு அடுத்து நல்ல விஷயம் இவர்தான்.

- Advertisement -

பொதுவாக பிரசித் கிருஷ்ணாவை பார்க்கும் பொழுது அவர் நல்ல டி20 பவுலர் இல்லை என்று நான் உணர்கிறேன். அவர் உயரமாக இருக்கிறார். அவருக்கு நல்ல ஹை ஆர்ம் ஆக்சன் இருக்கிறது. இதனால் பந்து மிக நன்றாக பவுன்ஸ் ஆகிறது. அவரிடம் நல்ல வேகம் மற்றும் வேகமான யார்க்கர் ஸ்லோவான யார்க்கர் என்று அடிப்படை விஷயங்கள் இருக்கிறது. இதனால் அவர் ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரி வருவார். ஆனால் டி20 கிரிக்கெட்டுக்கு சரிவர மாட்டார்.

அவர் நல்ல உயரமாக ஹை ஆம் ஆக்சன் கொண்டிருப்பதால் பந்து பவுன்ஸ் ஆகிறது. அவருக்கு இதில் நல்ல வேகமும் இருப்பதால் வந்து பேட்டில் ஸ்டிக்கர் இருக்கும் மேல்புற பகுதியில் படுகிறது. இதெல்லாம் அவரது பந்துவீச்சில் இருக்கும் நல்ல விஷயங்கள்!” என்று கூறியிருக்கிறார்!

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles