அடேங்கப்பா.. ரெக்கார்ட் மழை.. மும்பை ஹைதராபாத் போட்டியில் உடைக்கப்பட்ட 19 சாதனைகள்.. முழு விவரம்

இந்தியாவில் மிகவும் பிரபலமான உள்நாட்டு கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் டி20 போட்டிகள் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற எட்டாவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பல ரெகார்டுகளை உடைத்திருக்கிறது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 277 ரன்களை குவித்தது. அதன் பிறகு இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 248 ரன்கள் மட்டுமே குவித்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இருப்பினும் இந்த போட்டியின் மூலம் ஹைதராபாத் அணி டி20 ரெக்கார்டுகளை உடைத்து இருக்கிறது. ஐபிஎல்லில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர், மற்றும் டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர், ஐபில்லில் அடிக்கப்பட்ட அதிக சிக்ஸர்கள் என்று மொத்தம் 19 சாதனைகள் நேற்றுப் படைக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

2013ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அடித்த 265 ரன்கள் இதுவரை அதிகபட்சமாக இருந்தது. தற்போது ஐதராபாத் அணி அதை உடைத்து 277 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்திருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மேலும் உலகெங்கிலும் நடத்தப்படும் டி20 லீக்குகளிலேயே அதிகமாக அடிக்கப்பட்ட ஸ்கோர் இதுதான்.

- Advertisement -

ஹைதராபாத் அணி ஐபில்லில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும். இந்தப் போட்டியில் மொத்தம் இரு அணிகளும் சேர்த்து மொத்தம் 38 சிக்சர்களை அடித்துள்ளது. மேலும் டி20 போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர்கள் இதுவே ஆகும். மேலும் இப்போட்டியில் இரு அணிகளும் சேர்த்து அடித்த 523 ரன்கள் ஐபிஎல் தொடரிலும் டி20 தொடரிலும் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்.

இந்தப் போட்டியில் மும்பை அணி 20 சிக்சர்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச சிக்சர்கள் அடித்த அணியாக உள்ளது. மேலும் ஹைதராபாத் அணி 18 சிக்சர்கள் அடித்ததன் மூலம் மூன்றாவது அதிகபட்ச அணியாக உள்ளது. இப்போட்டியில் ஹைதராபாத் அணி 250 ரன்கள் அதிவேகமாக அடித்துள்ளது. மேலும் 14.14 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்து இரண்டாவது அதிகபட்ச சாதனையாக பதிவு செய்துள்ளது.

- Advertisement -

பத்து ஓவர்களில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 148 ஆகும். மும்பை அணியில் அறிமுகமான வேகப்பந்துவீச்சாளர் மகாபா தனது முதல் போட்டியிலேயே 66 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். ஒரு இன்னிங்ஸில் மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சாளர் விட்டுக் கொடுத்த அதிகபட்ச ரன்கள் இதுவே ஆகும். அபிஷேக் ஷர்மா சன்ரைசர்ஸ் அணிக்காக 16 பந்துகள் மூலம் அதிவேக அரைசதம் அடித்துள்ளார்.

இதற்குப் பின்னர் டிராவிட் 18 பந்துகள் மூலம் இரண்டாவது அரை சதம் அடித்தவர்களின் பட்டியலில் இணைகிறார். மேலும் ஐபிஎல்லில் நான்காவது அதிவேக அரைசதம் அடித்தவராக அபிஷேக்சர்மா இணைந்துள்ளார் (16 பந்துகள்).

SRH vs MI: போட்டியில் முறியடிக்கப்பட்ட 19 சாதனைகளின் முழு விபரம்

இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிகபட்ச ஸ்கோர் – 20 ஓவர்களில் 277/3

டி20 கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர்

டி20 லீக்குகள் அணியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்

ஐபிஎல்லில் எஸ்ஆர்எச்சின் அதிகபட்ச மொத்த ஸ்கோர்

ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள் – 38 சிக்ஸர்கள்

டி20 போட்டியில் அதிக சிக்ஸர்கள் – 38 சிக்ஸர்கள்

ஐபிஎல் போட்டியின் அதிகபட்ச ரன்கள் – 523 ரன்கள்

டி20 போட்டியில் அதிகபட்ச போட்டி – 523 ரன்கள்

ஐபிஎல் இன்னிங்ஸில் இரண்டாவது அதிக சிக்ஸர்கள் – எம்ஐ (20 சிக்ஸர்கள்)

ஐபிஎல் இன்னிங்ஸில் மூன்றாவது அதிக சிக்ஸர்கள் – SRH (18 சிக்ஸர்கள்)

ஒரு ஐபிஎல் இன்னிங்ஸில் அதிவேகமான 250 – SRH

ஐபிஎல் இன்னிங்ஸில் இரண்டாவது அதிவேக 200 – SRH (14.4 ஓவர்கள்)

10 ஓவர்கள் முடிவில் அணியின் அதிகபட்ச ஸ்கோர் SRH (148 ரன்கள்)

க்வேனா மபாகா ஒரு அறிமுக வீரருக்கான மிக விலையுயர்ந்த ஐபிஎல் புள்ளிவிவரங்களை பதிவு செய்தார் – (0/66)

ஒரு இன்னிங்ஸில் எம்ஐ பந்துவீச்சாளர் விட்டுக்கொடுத்த அதிக ரன்கள் – மபாகா (66)

ஐபிஎல்-ல் ஒரு பந்துவீச்சாளர் விட்டுக்கொடுத்த மூன்றாவது அதிக ரன்கள் – மபாகா (66)

SRHக்கு ஐபிஎல்லில் அதிவேக அரைசதம் – அபிஷேக் சர்மா (16 பந்துகள்)

SRH-க்கு இரண்டாவது வேகமான அரைசதம் – டிராவிஸ் ஹெட் (18 பந்துகள்)

ஐபிஎல்லில் நான்காவது அதிவேக அரைசதம் – அபிஷேக் சர்மா (16 பந்துகள்)

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles