ஸ்கூல் பீஸ் கட்டல.. 65ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கி மகள்களின் ஆசையை நிறைவேற்றிய தந்தை.. வைரலாகும் வீடியோ

ஐபிஎல்லில் வெற்றிகரமாக வலம் வரும் அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். இதுவரை ஐபிஎல்லில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தினை வென்று அசத்தியிருக்கிறது.

- Advertisement -

இதற்கு முக்கிய காரணம் சென்னை அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி. இவரது தலைமையில்தான் சென்னை அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தினை வென்று அசத்தியது. இதனால் இவரை காண்பதற்காகவே மைதானத்திற்கு ரசிகர்கள் பெருமளவில் படையெடுத்து வருகின்றனர்.

- Advertisement -

தற்போது 2024ஆம் ஆண்டு சீசன் இவருக்கு கடைசியாக இருக்கும் என்பதால் இதுவரை ஐபிஎல் போட்டிகளை பார்க்க வராத ரசிகர்களும் தோனிக்காக டிக்கெட் வாங்கி மைதானத்திற்கு வருகின்றனர்.அந்த வகையில் தனது மூன்று மகள்களின் ஆசையை அவர்களது தந்தை ஒருவர் நிறைவேற்றியுள்ளார்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் ஒருவர் தனது மூன்று மகள்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பிளாக்கில் பணம் கொடுத்து மூன்று டிக்கெட்டுகளை 64000 ரூபாய்க்கு திங்கட்கிழமை நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை கண்டு களித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இது குறித்து அவர் கூறும் பொழுது
“எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. அதனால் நான் பிளாக்கில் தான் வாங்கினேன். மொத்தம் 64,000 ஆனது. எனக்கு மூன்று குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை நான் இன்னும் செலுத்தவில்லை. அதை பின்னர் செலுத்திக் கொள்ளலாம் முதலில் தோனியை பார்க்க வேண்டும் என்று நாங்கள் வந்தோம். எனது குழந்தைகள் தோனியை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர் அந்த ஆசையை தற்போது நிறைவேற்றி இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் சென்னை அணி இதுபோன்று பல வெற்றிகளை பெற வேண்டும் என்று கூறினார்.

- Advertisement -

“எனது தந்தை இந்த டிக்கெட்டுகளை பெற மிகவும் கஷ்டப்பட்டார். தோனி விளையாட வருவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் கடைசியாக வந்தபோது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது” என்று அவரது இளையமகள் கூறினார். மகேந்திர சிங் தோனி புகழ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் இடம் பிடித்து இருக்கிறார் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே ஒரு சான்று.

இதையும் படிங்க:16 ஆண்டு கால சோகம்.. ரசிகர்களின் ஏக்கத்தை தீர்க்குமா சிஎஸ்கே?. ‘எல் கிளாசிகோ’ போட்டியின் முக்கிய அம்சங்கள்

மேலும் குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை விட ஐபிஎல் போட்டி எவ்வளவு முக்கியமா? இது முற்றிலும் தவறு என்று ஒரு சில ரசிகர்கள் இந்த ரசிகரை விமர்சித்தும் வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை அணியின் அடுத்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles