இந்தியா நியூசிலாந்து ஒரு நாள் தொடர்.. ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு வழங்கிய பிசிசிஐ.. ஆனால் பாண்டியா எடுத்த புதிய முடிவு.. வெளியான தகவல்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வருகிற ஜனவரி 11-ம் தேதி முதல் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரானது நடைபெற உள்ளது. அதற்குப் பிறகு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில் இதற்கான அணியை ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

அதில் குறிப்பாக ஹர்திக் பாண்டியா விளையாட இருக்கிறார் என்ற தகவலும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு நாள் தொடர்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவாக தொடங்க உள்ளதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு வழங்க பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஆனால் ஹர்திக் பாண்டியா இந்த ஓய்வு நேரத்தில் தான் மேட்ச் பிட்னெஸ் உடன் இருக்க முடிவு செய்து உள்ளூர் கிரிக்கட் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் விளையாட முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வருகிற ஜனவரி 3ஆம் தேதி விதர்பா அணிக்கு எதிரான போட்டியிலும் அதற்குப் பிறகு எட்டாம் தேதி சண்டிகர் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட அவர் விருப்பம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதனைக் கேட்ட ரசிகர்கள் ஹர்திக் பாண்டியா உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவதை காண ஆர்வமாக இருக்கிறார்கள்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles