இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் அதிரடியான ஆட்டத்தின் உதவியால் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிக சிறப்பாக விளையாடிய விராட் கோலி 120 பந்துகளை எதிர் கொண்டு 135 ரன்கள் குவித்தார். இதில் 11 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும்.
இந்த சூழ்நிலையில் இதற்கு முன்பாக விராட் கோலி டெஸ்ட் மற்றும் டி20 ஃபார்மேட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.இதனால் அவர் இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அதிக அளவு விளையாட வேண்டும் என்ற கருத்துக்கள் முன்னாள் கிரிக்கெட் வல்லுனர்களிடையே பரவிய நிலையில் இதற்கு விராட் கோலி பதிலும் அளித்திருக்கிறார்.
இதையும் படிங்க:இந்த மாதிரி ஆளைத்தான் நாங்க தேடிட்டு இருந்தோம்.. ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்களுக்கு கிடைச்சிருக்காரு – கேப்டன் கேஎல் ராகுல் சிலாகிப்பு
இதுகுறித்து விராட் கோலி கூறும் போது “போட்டிக்கு முன்பு அதிக பயிற்சி செய்வதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. என் கிரிக்கெட் எப்படி ஆனது என்றால் அது முற்றிலும் மனநிலையை பொறுத்து மட்டுமே அமைந்தது. மனரீதியாக என்னால் விளையாட முடியும் என்று நான் நினைத்தால் அதுவரை நான் விளையாடுவேன். தினமும் உடல்ரீதியாக நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன். ஆனால் அது கிரிக்கெட்டுக்காக கிடையாது அதுதான் என் வாழ்க்கை முறை. அதனால் நான் மனரீதியாக இருப்பதை மிகவும் முக்கியமானது. அதுதான் நான் தயாராக இருக்கிறேன் என்று அர்த்தத்தை கொடுக்கும்” என்று அவர் பேசி இருக்கிறார்.

