இந்த மாதிரி ஆளைத்தான் நாங்க தேடிட்டு இருந்தோம்.. ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்களுக்கு கிடைச்சிருக்காரு – கேப்டன் கேஎல் ராகுல் சிலாகிப்பு

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்திருந்த நிலையில் பந்து வீச்சில் ஹர்ஷித்ரானா மிக சிறப்பாக செயல்பட்டார். இந்த சூழ்நிலையில் கேப்டன் கே எல் ராகுல் அவர் குறித்து சில முக்கிய கருத்துகளை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

ஹர்ஷித் ரானா குறித்து அவர் கூறும் போது “ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டார், அவர் ஏற்கனவே திறமை வாய்ந்தவர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். மேலும் அவர் டிரெஸ்ஸிங் ரூமிற்க்குள் நுழைந்ததும் அவரிடம் நிறைய திறமை இருக்கிறது என்பதை அறிந்தோம். அவரைத்தான் நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம். அவரால் 140 கிலோ மீட்டருக்கு மேல் சிறப்பாக பந்து வீச முடியும். மேலும் கீழ் வரிசையில் ஓரளவு நிலைத்து நின்று பேட்டிங் விளையாடவும் முடியும். அவர் வளர்ந்து வரும் வீரர்தான் என்றாலும் அவரிடம் நிறைய திறனை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

- Advertisement -

அவரால் என்ன செய்ய முடியும் என்பதை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் ஆஸ்திரேலியாவில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். புதிய பந்தில் விக்கெட் எடுப்பது தான் அவரது வேலை. அவரது வேலையை அவர் சிறப்பாக செய்து வருகிறார்” என்று அவர் பேசி இருக்கிறார். நேற்றைய போட்டியில் அரிசி திட்ரான ஒரே ஓவரில் இரண்டு முக்கிய தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் விக்கட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles