இன்னும் 2 வருடம் விளையாட விராட் கோலி தயாராக இருந்தாரா?. பிசிசிஐயின் இந்த விதிதான் விராட் கோலி ஓய்வு பெற முக்கிய காரணம்.. வெளியான தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி நேற்று டெஸ்ட் பார்மெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கான முக்கிய காரணம் என்ன என்கிற தகவல் தற்போது வெளியாகி வருகிறது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா திடீரென்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த பரபரப்பு தகவல் அடங்குவதற்கு உள்ளாகவே நேற்று விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது மிகப்பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் விராட் கோலி இன்னும் இரண்டு ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட தயாராக இருந்திருப்பதாகவும், அதற்காக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு முன்பாக இந்தியா ஏ அணியில் இணைந்து பயிற்சியில் ஈடுபட திட்டம் வகுத்ததாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் விராட் கோலி தற்போது திடீரென ஓய்வை அறிவித்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கான முக்கிய காரணம் என்ன என்று பார்க்கும்போது விராட் கோலி அடுத்த இரண்டு வருடங்களுக்கு இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இருக்க விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் இந்திய அணிக்கு தற்காலிக கேப்டன் தேவையில்லை எனவும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிரந்தர கேப்டன் தேவை என்று கம்பீர் விராட் கோலியின் வேண்டுகோளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதைவிட முக்கிய காரணமாக இந்திய அணி ஒன்றரை மாதங்கள் தாண்டி சுற்றுப்பயணம் செய்யும் வெளிநாடுகளுக்கு வீரர்களின் குடும்பத்தினர் 15 நாட்கள் மட்டுமே தங்க முடியும் என்கிற பிசிசிஐயின் கட்டளை தற்போது பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே விராட் கோலி என்னால் தனியான அறையில் தங்க முடியாது என இந்திய நிர்வாகத்தின் கட்டளைக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் விராட் கோலி தனது குடும்பத்தினரோடு அதிக நாட்கள் இருக்க விருப்பம் தெரிவித்ததாக இந்திய நிர்வாகத்திற்கு கடிதம் மூலமாக தகவல் அனுப்பியிருந்தது தெரியவந்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க:மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடர்.. மே 17ல் ஆரம்பிக்கும் கிரிக்கெட் திருவிழா.. இறுதிப்போட்டி எப்போது?

ஆனால் விதிகளை மாற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தயாராக இல்லை என்பதால், விராட் கோலி ஏற்கனவே தனது முடிவை அறிவிக்க தயாராக இருந்திருக்கிறார். ஆனால் இந்தியா பாகிஸ்தான் போர் பதட்டம் காரணமாக உடனடியாக அறிவிக்க வேண்டாம் என பிசிசிஐ தரப்பிலிருந்து கூறப்பட்டதாகவும், நிலைமை சரியான பின்பு விராட் கோலி தன்னுடைய ஓய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளார். குடும்பத்தினரோடு இருக்க விராட் கோலிக்கு விலக்கு கொடுக்கப்பட்டிருந்தால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles