மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடர்.. மே 17ல் ஆரம்பிக்கும் கிரிக்கெட் திருவிழா.. இறுதிப்போட்டி எப்போது?

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான பதற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மே 8ஆம் தேதியில் இருந்து பாதியோடு நிறுத்தப்பட்டது. தற்போது இரு தரப்பும் அமைதிக்கு திரும்பிய சூழலில், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மீண்டும் தொடங்க உள்ளது. எஞ்சியுள்ள போட்டிகளை மே 17ம் தேதி முதல் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

- Advertisement -

அதன்படி பெங்களூரில் நடக்கும் முதல் போட்டியில்  ஆர்சிபி – கேகேஆர் அணிகள் மோத உள்ளன. இதன்பின் மே 18ம் தேதி ஜெய்ப்பூர் மைதானத்தில் ராஜஸ்தான் – பஞ்சாப் அணியும், இரவு8 நடக்கும் போட்டியில் டெல்லி – குஜராத் அணிகளும் மோதவுள்ளன. இதன்பின் மே 19ம் தேதி லக்னோ – ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் லக்னோ மைதானத்தில் நடக்கவுள்ளது.

- Advertisement -

சிஎஸ்கே போட்டி எங்கு?

பின் மே 20ம் தேதி நடக்கும் போட்டியில் சிஎஸ்கே – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டெல்லி மைதானத்திலும், மே 21ம் தேதி மும்பை – டெல்லி இடையிலான போட்டி மும்பை மண்ணிலும் நடக்கவுள்ளது. பின் மே 22ம் தேதி குஜராத் – லக்னோ இடையிலான ஆட்டம் அகமதாபாத் மைதானத்திலும், மே 23ம் தேதி நடக்கும் ஆட்டத்தில் ஆர்சிபி – ஐதராபாத் அணிகளும் விளையாடுகின்றன.

- Advertisement -

அதேபோல் மே 8ஆம் தேதி பாதியோடு நிறுத்தப்பட்ட பஞ்சாப் – டெல்லி இடையிலான ஆட்டம் மீண்டும் மே 24ம் தேதி நடக்கவுள்ளது. இதன்பின் குஜராத் – சிஎஸ்கே இடையிலான ஆட்டம் அகமதாபாத் மைதானத்திலும், மே 25ல் இரவு நேரத்தில் கேகேஆர் – ஐதராபாத் ஆட்டம் டெல்லி மைதானத்திலும் நடக்கவுள்ளது. தொடர்ந்து மே 26ல் பஞ்சாப் – மும்பை இடையிலான ஆட்டம் நடக்கிறது.

பிளே ஆஃப் எப்போது?

இறுதியாக மே 27ல் லக்னோ – ஆர்சிபி இடையிலான ஆட்டம்க் நடக்கவுள்ளது. இதன்பின் ஒரு நாள் இடைவெளி கொடுத்து மே 29ஆம் தேதி குவாலிஃபையர் முதல் போட்டியும், மே 30ம் தேதி எலிமினேட்டர் போட்டியும் நடக்கவுள்ளது. தொடர்ந்து மே 31ம் தேதி இடைவெளி கொடுத்து குவாலிஃபையர் 2ம் போட்டி ஜூன் 1ல் நடக்கவுளது.

- Advertisement -

பின் இறுதிப்போட்டி ஜூன் 3ம் தேதி நடக்கவுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் 6 மைதானங்களிலேயே நடக்கவுள்ளது. இதனால் அணிகள் அதிகளவில் அலையத் தேவையில்லை. அதேபோல் வெளிநாட்டு வீரர்களை சமாளித்து விளையாட வைப்பது அந்தந்த அணிகளின் நிர்வாகங்கள் கைகளில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles