இந்திய கிரிக்கெட் அணி வீரரான ரோகித் சர்மா நேற்று டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா இது குறித்து பேசும்போது கிரிக்கெட் வர்ணனையாளர்கள் குறித்த தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
நேற்று சர்வதேச டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்த ரோகித் சர்மா, தற்போது அளித்த ஒரு பேட்டியில் இந்திய கிரிக்கெட் கமெண்டரி தரமின்றி இருப்பதாகவும், வீரர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள் எனவும் ரோகித் சர்மா அதிரடியாக சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார். மேலும் புதிதாக கிரிக்கெட் கற்றுக்கொள்ள வருபவர்களுக்கு எந்த வகையிலும் உதவியாக இருக்காது எனவும் சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து ரோஹித் சர்மா விரிவாக கூறும்போது “நீங்கள் சர்ச்சைகளை உருவாக்குவதிலும் ஒரு விஷயத்தை ஊதி பெருசாக்குவதில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறீர்கள். கிரிக்கெட் கமெண்டரியின் தரம் முன்பு போல் இல்லை. அதேபோல பத்திரிகைகளின் தரமும் குறைந்து விட்டது. முன்பு ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது என்றால் அதனைச் சுற்றித்தான் அனைத்து பேச்சுக்களும் இருக்கும். இப்போது விளையாட்டுகள் பற்றி பேசுவது குறைவாகிவிட்டது. அதன் உத்திகள் பற்றி பேசுவது வெகுவாகவே குறைந்து விட்டது.
நாம் போட்டிகளை தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம். நாம் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் விளையாடும் போது கமெண்ட்ரிகள் வேறு விதமாகவும், அதுவே ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பயணம் சென்று விளையாடும் போது கிரிக்கெட் கமெண்ட்ரிகள் வேறு விதமாகவும் இருக்கிறது. இங்கே ஒரு வீரரை தனிமைப்படுத்தி அவரைப் பற்றி தனிப்பட்ட முறையில் பேசுவது தான் வழக்கமாக இருக்கிறது. கிரிக்கெட் குறித்து தெரிந்து கொள்ள நிறைய பேர் இருக்கிறார்கள். இதற்கு எதற்கு மசாலா தேவை?
இதையும் படிங்க:கம்பீர் அகர்கர் இதை சொல்லாம ரோகித் இந்த முடிவை எடுக்க மாட்டார்.. அவருக்கு என்னமோ நடந்திருக்கு.. விரேந்திர சேவாக் பேட்டி
ரசிகர்களுக்கு கொஞ்சம் மசாலா தேவை தான், ஆனால் உண்மையான கிரிக்கெட்டை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்களும் நிறைய உண்டு. எடுத்துக்காட்டாக கூறினால் ஒரு வீரரின் பார்ம் எதற்காக குறைகிறது ஏன் அவர் தடுமாற்றமாக விளையாடுகிறார்? என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். வீரர்களை மதிக்கும் போது தான் இது குறித்து எல்லாம் பேச முடியும்” என ரோகித் சர்மா பேசியிருக்கிறார்.

