ரசிகர்கள் ரோட்டுக்கு வந்து பேட்டி கொடுக்கிறது பார்த்தா கஷ்டமா இருக்கு.. தோனி இனி தாமதிக்கக் கூடாது – மனோஜ் திவாரி பேட்டி

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை தோற்கடித்துள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சென்னை அணி வீரர் எம்எஸ் தோனி பேட்டிங் குறித்து இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனி தலைமையில் 2023 ஆம் ஆண்டு ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்தது. எனவே அந்த சமயத்திலேயே தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக தான் கேப்டன் பகுதியில் விட்டு மட்டுமே விலகப் போவதாகவும் அணியில் ஒரு வீரராக தொடர்ந்து விளையாடுவேன் என்று அறிவித்தார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டும் பேட்டிங் வரிசையில் கடைசியாகவே களமிறங்கி சில பந்துகளை மட்டுமே சந்திக்கிறார். கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே இந்த ஆண்டு தொடர்ந்து தொடக்கத்திலேயே மோசமான தோல்விகளை சந்திக்கும் நிலையில் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங்கும் தற்போது கேள்விக்குள்ளாகி இருக்கிறது. தோனியின் பேட்டிங் குறித்து சிஎஸ்கே ரசிகர்களே விமர்சனம் செய்யும் அளவுக்கு வந்த நிலையில் இதுகுறித்து மனோஜ் திவாரி சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” 2023 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்ற போது தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதற்கு சரியான நேரமாக இருந்தது. அவர் அப்போது ஓய்வு பெற்றிருந்தால் விஷயங்கள் அனைத்துமே நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். கிரிக்கெட்டில் அவர் சம்பாதித்த மரியாதை மற்றும் புகழ் ஆகியவை கடந்த இரண்டு ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக நழுவுவதாக தோன்றுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க:நாங்கள் வெற்றிபெற முயற்சிக்கிறோம்.. குழுவாக இணைந்து போராடவில்லை.. சோகமான ருதுராஜ்

தோனி தன்னுடைய பெயர் பவரை இழந்துவிட்டார். இதை ரசிகர்களால் பார்க்க சகிக்கவில்லை. கடந்த போட்டியின் தோல்விக்கு பிறகு தோனிக்கு எதிராக ரசிகர்கள் சாலையில் வந்து பேட்டி கொடுத்தது, இனி இது வேலைக்கு ஆகாது என்பதை தற்போது தெளிவாக உணர்த்துகிறது. எனவே தோனி இதுகுறித்து முடிவு செய்தால் நன்றாக இருக்கும்” என்று மனோஜ் திவாரி கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles