ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் கேகேஆர் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றியை பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் முதல் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் 174 ரன்களை விளாசியது. இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்களை எடுத்து அபார வெற்றியை பெற்றது.
ரஜத் பட்டிதர் பேட்டி
இதன் மூலமாக 175 ரன்களை அதிக பந்துகளை மீதம் வைத்து ஆர்சிபி அணி வென்றிருக்கிறது. அதேபோல் ஐபிஎல் லீக் தொடரின் முதல் போட்டியில் வென்று ஆர்சிபி புதிய வரலாறு படைத்துள்ளது. அதேபோல் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரஜத் பட்டிதர் முதல் போட்டியிலேயே ஆர்சிபி அணிக்கு வெற்றியை பெற்றுள்ளார்.
இந்த வெற்றிக்கு பின் ரஜத் பட்டிதர் பேசும் போது, முதல் முறையாக கேப்டனாக களமிறங்கியதால், கொஞ்சம் அழுத்தம் இருந்தது. ஆனாலும் இன்றைய நாள் சிறந்ததாக அமைந்தது. இதுபோன்று ஒவ்வொரு போட்டிலும் வென்றால், ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருக்கும். அதுமட்டும் நன்றாக புரிகிறது. சுயாஷ் சர்மா ரன்களை விட்டுக் கொடுத்தது பற்றி கவலையே இல்லை.
13வது ஓவரில் மாறிய ஆட்டம்
ஏனென்றால் அவர்தான் எங்களின் விக்கெட் டேக்கிங் பவுலர். அதனால் அவரை நன்றாக பயன்படுத்துவோம். நிச்சயமாக க்ர்ணால் பாண்டியா மற்றும் சுயாஷ் சர்மா இருவரும் ஆட்டத்தை மாற்றியுள்ளனர். அவர்களுக்குதான் இந்த வெற்றி சேரும். 13வது ஓவரில் இருந்து ஆட்டத்தை மாற்றிவிட்டார்கள். விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற மனநிலை அபாரமாக இருந்தது.
விராட் கோலி போல் ஒருவர் இருப்பது சிறந்த விஷயம். ஜாம்பவான் வீரரிடம் இருந்து கற்றுக் கொள்வது சிறந்ததாக அமைந்துள்ளது. ஹர்சித் ராணாவுக்கு எதிராக அடித்த ஷாட் முன்பே திட்டமிட்ட ஒன்றாகும். அதனை கவர்ஸில் அடித்த நினைத்தேன். அதனால் பந்து சாதாரணமாக கிடைத்தது என்று தெரிவித்துள்ளார்.

