நியாயமா பார்த்தா நான் டி20ஐ உலகக் கோப்பை ஆடி இருக்கணும்.. இந்த ஒரு விஷயம் அது நடக்கவிடாம செஞ்சிடுச்சு – வெங்கடேஷ் ஐயர் வருத்தம்

2025 ஐபிஎல் சீசன் நெருங்கி வரும் நிலையில், கே.கே.ஆர் அணி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர தயாராகி வருகிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பவர் வெங்கடேஷ் ஐயர். 2025 ஏலத்தில் ஆர்.சி.பி-யுடன் கடும் போட்டியை எதிர்கொண்ட கே.கே.ஆர், அவரை 23.75 கோடி ரூபாய்க்கு மீட்டது. நாக்-அவுட் சூப்பர் ஸ்டாரான இவர், பல அரைசதங்களுடன் அணிக்கு மதிப்பு சேர்ப்பவர் என்பதால் கே.கே.ஆர் அவரை இதனை கோடிகள் கொடுத்து மீண்டும் வாங்கியுள்ளது.

- Advertisement -

அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய வெங்கடேஷ் ஐயர், 2022 டி20ஐ உலகக் கோப்பையில் இடம்பெற வேண்டிய சூழ்நிலை அமைந்தும், அதனை அவர் எவ்வாறு கெடுத்துக் கொண்டார் என்பது பற்றியும் பேசியுள்ளார். 2021 ஐ.பி.எலில் துவக்க வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர், சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் அப்போது ஃபார்ம் அவுட்டில் இருந்த பாண்டியாவுக்கு பதிலாக வாய்ப்பைப் பெற்றார். இந்திய அணியில் இணைந்து 9 டி20 மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் ஆல்-ரவுண்டராக விளையாடி, வேகப்பந்து வீசினார். ஆனால், சிறப்பாக செயல்படாததால் அணியில் இருந்து பின்னர் நீக்கப்பட்டார்.

- Advertisement -

பிசிசிஐ வெங்கடேஷ் ஐயரை டி20ஐ உலகக் கோப்பைக்கு அழைத்துச் செல்ல திட்டம் தீட்டி தான் அவரை அணியில் சேர்த்தனர். ஆனால் வெங்கடேஷ் ஐயர் மெத்தனமாக இருந்து பெரிய வாய்ப்பை நழுவவுட்டார். இது பற்றி அவர் பேசியதாவது, ” 2022ல் டி20 உலகக் கோப்பையில் விளையாடப் போகிறோம் என்பதைப் பற்றி கனவுக் கண்டே நடப்பு ஆட்டங்களில் கவனம் செலுத்தத் தவறிவிட்டேன். அதனால் இந்திய அணியில் இடத்தையும் உலகக் கோப்பை வாய்ப்பு இரண்டையும் இழந்தேன். இந்நிகழ்வு எனக்கு ஒரு பெரிய பாடமாக, வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அன்றில் இருந்து நான், நடப்பு ஆட்டங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி, எதிர்காலத்தின் மேல் உள்ள பாரத்தை பற்றி யோசிப்பதைத் தவிர்த்தேன். ” என்றார்.

- Advertisement -

அதன்பின் அபாரமாக மீண்டு வந்த வெங்கடேஷ் ஐயர், 2023 ஐபிஎல்லில் 145.85 ஸ்ட்ரைக் ரேட்டில் 404 ரன்களும், 2024ல் 158.80 ஸ்ட்ரைக் ரேட்டில் 370 ரன்களும் குவித்தார். இதே வேகத்தில் இந்த ஆண்டும் கே.கே.ஆர் அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிக்காட்டி, மீண்டும் இந்திய அணிக்குள் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles