ஓய்வுபெறும் எண்ணமே கிடையாது.. சோசியல் மீடியா பயம்படுத்தாததற்கு அதுவே காரணம்.. விராட் கோலி கொடுத்த பேட்டி

நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் வரும் 22ம் தேதி முதல் நடக்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாட உள்ளது. இதற்காக அனைத்து அணிகளின் வீரர்களும் சிறப்பாக தயாராகி வருகின்றனர். குறிப்பாக இம்முறை ஆர்சிபி அணி எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்று மும்முரமாக உள்ளது.

- Advertisement -

அதற்காக இளம் வீரர் ரஜத் படிதர் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இருந்தாலும் விராட் கோலி மீதான கவனம் சற்றும் குறையவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அபார ஃபார்மில் ஆடிய விராட் கோலி, ஐபிஎல் தொடரில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விராட் கோலியின் ஓய்வு தொடர்பான விவாதமும் நடந்து வருகிறது.

- Advertisement -

ஓய்வு எப்போது?

- Advertisement -

இந்த சூழலில் விராட் கோலி ஆர்சிபி அணி பாட்கேஸ்டில் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேசி இருக்கிறார். அதில், இந்திய அணி அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்த கூடிய இடத்தில் இருந்தால், எதைப் பற்றியும் கவலை கொள்ள மாட்டேன். உடனடியாக ஓய்வை அறிவித்துவிட்டு மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவேன்.

தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் எந்த சாதனையையும் படைக்க நான் விளையாடவில்லை. கிரிக்கெட்டை கொண்டாடி விளையாட விரும்புகிறேன். தற்போது அப்படிதான் ஆடி வருகிறேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து சோசியல் மீடியாவில் தற்போது எந்த பதிவையும் எழுவதோ, புகைப்படங்களை வெளியிடுவதோ இல்லையே ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

- Advertisement -

சோசியல் மீடியா

அதற்கு விராட் கோலி, நான் சோசியல் மீடியாவில் அதிகமான பதிவுகளை எழுதுவதில்லை. ஏனென்றால் எந்தவொரு குறிக்கோளும் இல்லாமல் சோசியல் மீடியாவை பயன்படுத்துவது நம்மை பலவீனப்படுத்தும். சோசியல் மீடியா என் வாழ்க்கையில் எந்த மாற்றத்தை கொண்டு வருவதில்லை. மக்களின் கருத்துகளும் என்னை பாதிப்பதில்லை. அதனால் எந்த பதிவையும் இடுவதில்லை என்று கூறியுள்ளார்.

விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் ஒரு சதம் விளாசினால், சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட்டில் 10 சதங்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். இதனால் விராட் கோலியின் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இம்முறை அவர் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதிலும் ஆர்வமாக உள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles