தோனிக்கு நிகரா ரோகித்தையும் பார்க்கணும்.. பிளேயர்ஸ் கிட்ட அவர் இப்படித்தான் நடந்துக்கிறார் – ஷேவாக் பேட்டி

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் ரோகித் சர்மா எப்படி வெற்றிகரமாக இருக்கிறார் என்பதற்கான காரணம் குறித்து சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியைப் பொறுத்தவரை மகேந்திர சிங் தோனி வெற்றிகரமான கேப்டனாக இருக்கிறார். அவரது தலைமையில் மூன்று ஐசிசி தொடர்களை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. தற்போது அவருக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேலும் ஒரு நாள் போட்டிகளைப் பொறுத்தவரை அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் ஆகவும் ரோகித் சர்மா சிறப்பான சாதனை வைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரேந்திர சேவாக், எப்படி ரோஹித் சர்மா இவ்வளவு வெற்றிகரமான கேப்டனாக இருக்கிறார் என்பதற்கான கருத்துக்களை தற்போது பேசியிருக்கிறார். அதாவது அவர் தன்னுடன் விளையாடாத வீரர்களையும் அரவணைத்துச் செல்கிறார் என விரேந்திர சேவாக் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

இதுகுறித்து சேவாக் கூறும்போது “நாம் ரோகித் சர்மாவின் கேப்டன்சியை குறைத்து மதிப்பிடுகிறோம். ஆனால் ஐசிசி தொடர்களை வென்ற கேப்டன்களில் மகேந்திர சிங் தோனிக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா இருக்கிறார். அவர் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் விதம், அணியை வழி நடத்தும் விதம் என அனைத்திலும் சிறந்து விளங்குகிறார். இதனால்தான் ரோஹித் சர்மா சிறந்த கேப்டனாக இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க:ஹலோ ஐசிசி…பிசிசிஐ-க்கு ஏன் கூஜா தூக்குறீங்க..நாளைக்கு நோ-பால் வேண்டாம்னு சொன்னாலும் ஏத்துக்குவீங்களா.. வெஸ்ட் இண்டிஸ் லெஜெண்ட் ராபர்ட்ஸ் கடும் தாக்கு

குறிப்பாக அர்ஸ்தீப் சிங்குக்கு முன்பாக ஹர்சித் ராணா விளையாடினாலும், வருண் சக்கரவர்த்தியை அணியில் எடுத்த பிறகு ஹர்ஷித்ராணா கழட்டி விடப்பட்டாலும் அதற்கான தகுந்த காரணங்களை கூறி நல்ல தொடர்பை வீரர்களிடம் ரோகித் சர்மா ஏற்படுத்தி வைத்திருக்கிறார். எனவே அவர்களுக்கு தாங்கள் ஏன் விளையாடுகிறோம் விளையாடவில்லை என்பது குறித்து தெளிவான விளக்கத்தை கூறுகிறார். மேலும் அவர் தன்னைப் பற்றி குறைவாகவும் அணியை பற்றி அதிகமாகவும் நினைக்கிறார். தன் வீரர்களுக்கு எப்போதுமே அவர் வசதியாக இருக்க விரும்புகிறார்” என்று ஷேவாக் பேசியிருக்கிறார். எனவே ரோஹித் சர்மா அடுத்த இரண்டு ஆண்டுகள் இந்திய அணியின் கேப்டனாக நீடித்தால் அதற்கு அடுத்து நடைபெற உள்ள இரண்டு ஐசிசி கோப்பைகளையும் வெற்றி பெற்று தோனியின் சாதனையை சமன் செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles