பிரஷர் அதிகமா இருக்கு.. இந்த நேரத்தில் நன்றாக ஆடினால் நாங்கள் சிறந்த அணி.. நம்பிக்கையாக கூறிய சுப்மன் கில்!

இந்தியா – நியூசிலாந்து இடையிலான சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி நாளை துபாய் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த ஆட்டத்தில் வெல்வதற்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்திய அணி ஹாட்ரிக் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி இருப்பதால், இம்முறை நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த சூழலில் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சுப்மன் கில் சொல்லும் போது, ஐசிசி தொடரின் இறுதிப் போட்டி என்பதே மிகப்பெரிய பிரஷர். கடந்த முறை 2023ல் உலகக்கோப்பையில் விளையாடும் போது இறுதி சுற்றில் எங்களால் சரியாக செயல்பட முடியவில்லை. இதனால் இம்முறை கோப்பையை வெல்ல முயற்சிப்போம்.

- Advertisement -

அழுத்தம் பற்றி சுப்மன் கில்

- Advertisement -

மிகப்பெரிய போட்டிகளில் எந்த அணி அழுத்தத்தை எளிதாக சமாளிக்கிறதோ, அந்த அணியால் வெற்றி பெற முடியும். அழுத்தத்தை சமாளிப்பதற்காகவே பழைய ஆட்டங்களை பற்றி பேசுவோம். அதேபோல் அழுத்தமான சூழல்களிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவே சிறந்த அணிக்கு சரியான எடுத்துக்காட்டு. இதுவரை 4 போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருக்கிறோம். 

ஆனால் கடந்த முறை நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆடும் போது விரைவாக விக்கெட்டுகளை பறிகொடுத்தோம். அப்படி நடக்கவில்லை என்றால் கொஞ்சம் எளிதாக வென்றிருப்போம். அதனால் கூடுதலாக ஆலோசிக்க எதுவும் இல்லை. டாப் 3 முதல் 5 பேட்டிங் வரிசை வரை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செட்டிலாகி விட்டால், பெரிய இலக்கையும் எளிதாக சேஸ் செய்யலாம். அல்லது பெரிய இலக்கை நிர்ணயிக்கலாம்.

- Advertisement -

ரோகித் சர்மா, விராட் கோலி

நாங்கள் ஆடி வரும் துபாய் மைதானத்தில் ஒரு முறை கூட 300 ரன்களுக்கு ஆட்டம் செல்லவே இல்லை. பாகிஸ்தானில் ஆடிய போட்டிகளை விடவும் இந்த மைதானம் முற்றிலும் வித்தியாசமானது. ஒருமுறை கோப்பையை வென்றுவிட்டால், அடுத்த கோப்பைக்கு உந்து சக்தி கிடைக்கும். அதேபோல் எந்த அவசரமோ தீவிரமோ காட்ட மாட்டோம். 

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மிகச்சிறந்த தொடக்க வீரர். அதேபோல் விராட் கோலி ஆல்ரைம் கிரேட் வீரராக இருக்கிறார்.  என்னை பொறுத்தவரை இந்திய அணியின் சிறந்த பேட்டிங் வரிசை இதுதான். அதேபோல் கேஎல் ராகுல், ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles