ரத்தான ஆட்டம்.. அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.. ஆஃப்கானிஸ்தானுக்கு உதவி செய்யுமா இங்கிலாந்து?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு அரையிறுதி இடம் உறுதியாகும் என்பதால், கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்விக்கு ஆஸ்திரேலியா அணி பழி வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் – ஜத்ரான் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் குர்பாஸ் டக் அவுட்டாகிய நிலையில், அடல் – ஜத்ரான் கூட்டணி 2வது விக்கெட்டுக்கு 70 ரன்களை சேர்த்தது. நிதானமாக ஆடிய ஜத்ரான் 22 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ரஹ்மத் ஷா 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

ஆஃப்கானிஸ்தான் பேட்டிங்

- Advertisement -

இதனிடையே சிறப்பாக ஆடிய அடல் 95 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து அசத்தலாக ஆடினார். கடைசி நேரத்தில் அஸ்மத்துல்லா 63 பந்துகளில் 67 ரன்களை விளாசி அதிரடி காட்ட, ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 273 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஷார்ட் – ட்ராவிஸ் ஹெட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இருவரும் அதிரடியாக ஆடிய நிலையில் ஷார்ட் 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் டிராவிஸ் ஹெட் சோலோவாக ருத்ரதாண்டவம் ஆடினார். இதனால் 12.5 ஓவர்களில் ஆஸ்திஒரேலியா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களை சேர்த்திருந்தது. அப்போது திடீரென கனமழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதன்பின் மீண்டும் ஆட்டம் தொடங்க வாய்ப்பில்லை என்று தெரிய வந்தது.

- Advertisement -

ஆட்டம் ரத்து

இதனால் ஆட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்த நடுவர்கள், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகளை வழங்கினர். இதனால் ஆஸ்திரேலியா அணி 4 புள்ளிகளுடன் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 2009ம் ஆண்டுக்கு பின் ஆஸ்திரேலியா அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு முதல்முறையாக முன்னேறியுள்ளது.

அதேபோல் ஆஃப்கானிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது. இந்த சூழலில் அடுத்ததாக தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டமே ஆஃப்கானிஸ்தான் அணியின் தலைவிதியை முடிவு செய்யும். அந்த போட்டியில் இங்கிலாந்து அணி வென்றால், ஆஃப்கானிஸ்தான் அணியும், தென்னாப்பிரிக்கா அணி வென்றால் தென்னாப்பிரிக்கா அணியும் அரையிறுதிக்கு முன்னேறும். 

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles