விராட் கோலி என்னையும் மிஞ்சி விட்டார்.. ODI கிரிக்கெட்டில் இப்படி ஒரு ஆள நான் பார்த்ததே இல்லை – ரிக்கி பாண்டிங் புகழாரம்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணி வீரர் விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் லீக் தொடரில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதற்குப் பிறகு விளையாடிய இந்திய அணிக்கு தொடக்கம் நன்றாக அமைந்த நிலையில் அதற்கு பின்னர் களமிறங்கிய விராட் கோலி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தார்.

- Advertisement -

ஒரு நாள் போட்டியிடல் தனது 51 வது சதத்தை பதிவு செய்த விராட் கோலி ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 82 சதங்கள் பதிவு செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 14,000 ரன்கள் குவித்து சிறப்பான சாதனை படைத்திருக்கும் விராட் கோலி ஆஸ்திரேலியா முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் பாராட்டி பேசியிருக்கிறார்.

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறும் போது “விராட் கோலி நீண்ட காலமாகவே ஒரு சாம்பியன் வீரராக இருந்து வருகிறார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அவரவர் தலைசிறந்த ஜாம்பவான் வீரராக இருக்கிறார். பாகிஸ்தான் போட்டியில் ஸ்கோர் கார்டை எடுத்துப் பாருங்கள். விராட் கோலி சதம் அடித்திருக்கிறார், ஆனால் பாகிஸ்தான் அணியில் பெரிய ரன்கள் யாரும் எடுக்கவில்லை. விராட் கோலியை விட நான் 50 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு சிறந்த வீரரை பார்க்கவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க:பாகிஸ்தான் கருணை பார்த்து போனா போகுதுனு கோலியை சதம் அடிக்கவிட்டாங்க.. இல்லனா கோலி எப்போவோ அவுட் ஆகி போய் இருப்பாரு – சுனில் கவாஸ்கர் பேச்சு

இந்த வடிவத்தில் அவர் ரன்கள் குவித்த விதத்தில் என்னையும் தாண்டி மேலே சென்று விட்டார். எனவே இதில் விராட் கோலி இந்த வடிவ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக வெகு காலம் நினைவில் இருப்பார் என்று நினைக்கிறேன்” என ரிக்கி பாண்டிங் பேசியிருக்கிறார். இந்திய அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வருகிற மார்ச் இரண்டாம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles