பாகிஸ்தான் கருணை பார்த்து போனா போகுதுனு கோலியை சதம் அடிக்கவிட்டாங்க.. இல்லனா கோலி எப்போவோ அவுட் ஆகி போய் இருப்பாரு – சுனில் கவாஸ்கர் பேச்சு

பாகிஸ்தான் அணியுடனான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அபார சதம் விளாசிய விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். எனினும், இந்தப் போட்டியில் விராட் கோலி சதம் அடித்ததை பாகிஸ்தான் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் எனவும் அவர்கள் கருணையால் தான் கோலி சதம் விளாசினார் எனவும் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.

- Advertisement -

பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 242 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி கில், கோலி, ஐயர் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைத் தட்டிச் சென்றதோடு அரை இறுதி வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது. இந்தப் போட்டியின் 21வது ஓவரின் போது ஏற்பட்ட ஓர் சம்பவம் பற்றி விமர்சனம் வந்துள்ளது.

- Advertisement -

அதாவது ஹாரிஸ் ரவுப் வீசிய ஓவரில் விராட் கோலி கவர்ஸில் தட்டி விட்டு சிங்கிள் ஓடினார். அவரை ரன் அவுட் ஆக்கும் நோக்கில் ஸ்டம்புகளை நோக்கி பாகிஸ்தான் வீரர் எரிந்தார். ஆனால் கோலி கிரீசுக்குள் ஏற்கனவே வந்துவிட்டார். அதனால் அவரை நோக்கி வந்தப் பந்தை அவர் கைகளால் தடுத்தார். என்னதான் கிரீசுக்குள் வந்து விட்டாலும் எதிரணி அனுமதி இல்லாமல் பந்தைத் தடுத்து நிறுத்துவது போட்டியின் விதிப் படி அவுட்.

- Advertisement -

ஃபீல்டை அச்சுறுத்தும் கணக்கில் விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்திருக்கலாம். அவர் அப்போது 41 ரன்களில் இருந்தார். இது போன்ற ஆட்டமிழப்புகள் இதற்க்கு முன்பு இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளில் கூட நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை பாகிஸ்தான் அவ்வாறு ஆட்டமிழப்பைக் கேட்காததால் கோலி அங்கிருந்து சதம் விளாசினார்.

இது குறித்து முன்னாள் இந்தியா வீரர் சுனில் கவாஸ்கர் பேசியிருப்பதாவது, ” விராட் கோலி பந்தைத் தடுத்ததை பாகிஸ்தான் வீரர்கள் மேல் முறையீடு செய்திருந்தால் கோலி அப்போதே அவுட் ஆகி இருப்பார். ஆனால் அதிர்ஷ்டவசமாக பாகிஸ்தான் அணி அதைச் செய்யவில்லை. கிரீஸ் உள்ளே வந்தப் பின்னர் பந்தைத் தடுப்பதில் என்ன அவசியம் ? ” என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles