3 வருஷமா மேகி மட்டுமே சாப்பிட்டு இருந்த பசங்களை.. இப்படித்தான் மும்பை அணிக்குள் கொண்டு வந்தோம் – நீதா அம்பானி பேட்டி

ஐபிஎல் கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணியாக திகழ்வது மும்பை இந்தியன்ஸ். இதுவரை இந்த அணி ஐபிஎல் தொடரில் 5 சாம்பியன் கோப்பைகளை கைப்பற்றி வரலாறு படைத்திருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது சகோதரர் க்ருணால் பாண்டியா இருவரும் தேர்வு செய்யப்பட்ட விதம் குறித்து அந்த அணியின் உரிமையாளர் நீதா அம்பானி சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளங்குவதற்கு காரணம், அந்த அணியில் இருக்கும் இளம் வீரர்கள் மற்றும் சர்வதேச வீரர்கள் அனைவரும் பட்டையை கிளப்பி விளையாடி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியா க்ருனல் பாண்டியா மற்றும் பும்ரா ஆகியோர் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகத்தான் இளம் வீரர்களாக அறிமுகமாகி விளையாடினார்கள். அதற்குப் பிறகு அவர்கள் தற்போது இருக்கும் நிலை வரலாறாகும். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் அவர்கள் மூவரும் எப்படி அணிக்குள் வந்தார்கள் என்பது குறித்து சில விஷயங்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு பட்ஜெட் என நிர்ணயித்து விட்டார்கள். எனவே எங்களுக்குள் கொடுக்கப்பட்ட தொகைக்குள் தான் வீரர்களை வாங்க வேண்டும் என்கிற நிலை இருந்தது. இதனால் நாங்கள் இளம் வீரர்களை அதிகமாக வாங்க வேண்டும் என்று முயற்சித்தோம். இதனால் நான் ரஞ்சி டிராபி தொடர்களில் பார்வையாளராக கலந்து கொண்டு இளம் வீரர்களை கண்காணிப்பேன். அப்போதுதான் எங்கள் நிர்வாகிகள் இரண்டு இளம் வீரர்களை எங்கள் பயிற்சி முகாமுக்கு அழைத்து வந்தார்கள்.

அப்போது நான் அவர்களிடம் விசாரித்தேன். அதன் பிறகு தான் தெரிந்தது அவர்கள் இருவரும் மூன்று வருடங்களாக வெறும் மேகி மட்டுமே சாப்பிட்டு விளையாடி இருக்கிறார்கள் என்று. காரணம் அவர்களிடம் பணம் கிடையாது. ஆனால் கிரிக்கெட்டில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற வெறி அவர்களிடத்தில் இருந்தது. ஹர்திக் பாண்டியாவை வெறும் 10 லட்ச ரூபாய்க்கு அப்போது வாங்கினேன். இப்போது அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க:குடும்பத்தை சந்திக்கக் கூடாதா? இந்திய வீரர்களுக்கு செக் வைத்த பிசிசிஐ.. கம்பீரிடமும் அனுமதி வாங்க வேண்டுமாம்

இதேபோன்று அடுத்த ஆண்டு ஒரு இளம் வீரர் வித்தியாசமான முறையில் பந்து வீசுவதை கண்டோம். அவருடன் பேசி அவர் விளையாடுவதை நாங்கள் பார்த்தோம். அவர்தான் பும்ரா. அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதெல்லாம் வரலாறு. இதே போல தான் நாங்கள் திலக் வர்மாவை தேர்வு செய்தோம், அவர் தற்போது இந்திய அணியில் இருக்கிறார். இந்திய கிரிக்கெட்டில் இளம் வீரர்களை வளர்த்து வரும் பள்ளிக்கூடமாக எங்கள் அணி இருக்கிறது” என பேசி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles