குடும்பத்தை சந்திக்கக் கூடாதா? இந்திய வீரர்களுக்கு செக் வைத்த பிசிசிஐ.. கம்பீரிடமும் அனுமதி வாங்க வேண்டுமாம்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து இந்திய அணி ஏமாற்றம் அளித்தது.

- Advertisement -

இதனால் 2013ஆம் ஆண்டு வென்றதை போல் இம்முறை வெல்ல இந்திய அணி வீரர்கள் தீவிரமாக உள்ளனர். இந்திய அணி விளையாடும் போட்டிகளில் துபாய் மைதானத்தில் நடக்கவுள்ளது. முதல் போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. இதனிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது இந்திய வீரர்கள் குடும்பத்தை சந்திப்பதற்கு சில விதிகளை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

பிசிசிஐ கட்டுப்பாடு

- Advertisement -

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்திய அணி அடைந்த தோல்வி காரணமாக பிசிசிஐ பல்வேறு விதிகளை கொண்டு வந்தது. அதன்படி இந்திய அணி வீரர்கள் ஒரு சுற்றுப்பயணத்தில் 45 நாட்களுக்கு மேல் செலவிட வேண்டிய சூழல் இருந்தால் மட்டுமே குடும்பத்தினரை அழைத்து செல்ல முடியும் என்ற விதியை கொண்டு வந்தது. 

14 நாட்களுக்கு குறைவான சுற்றுப்பயணத்தின் போது குடும்பத்தை அழைத்து செல்லக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது இந்திய அணி வீரர்கள் குடும்பத்தினரை ஒரேயொரு முறை மட்டுமே சந்திக்கலாம் என்று பிசிசிஐ கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

- Advertisement -

காரணம் என்ன?

பிசிசிஐ கட்டுப்பாடுகளின்படி ஒரேயொரு ஆட்டத்திற்கு மட்டுமே இந்திய அணி வீரர்கள் தங்களின் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியும். மற்ற நேரங்களில் குடும்பத்தினருடன் இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்களுக்கு இடையிலான நட்பையும், புரிதலையும் அதிகரிக்க அவர்கள் சக வீரர்களுடன் நேரம் செலவிட இந்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேபோல் குடும்பத்தினரை அழைத்து வருவதற்கு முன்பாக இந்திய அணியின் மேனேஜர், பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு முன் கூட்டியே தகவல் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் மொத்தமாக 19 நாட்கள் நடக்கவுள்ளதால், பிசிசிஐ ஒரேயொரு முறை மட்டுமே வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை நேரில் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles