இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் 60 ரன்கள் எடுத்து ரோகித் சர்மாவுக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்தார்.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கில் பெஸ்ட் பேட்ஸ்மேன் எனவும் இங்கிலாந்து வீரர்கள் விளையாடும் விதம் குறித்தும் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இந்திய இளம் கிரிக்கெட் வீரர் சுப்மான்கில் சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இதனால் அவரது பேட்டிங் குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு அவரை துணை கேப்டனாக நியமித்ததும் பெரிய சர்ச்சையானது. இந்த சூழ்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் களம் இறங்கிய கில் சிறப்பாக விளையாடி 87 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பிறகு இரண்டாவது ஒருநாள் போட்டியில் களம் இறங்கிய கில் 52 பந்துகளில் 60 ரன்கள் குவித்து தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கில் விளையாடுவதை பாராட்டியும் இங்கிலாந்து வீரர்கள் விளையாடியதற்கு தனது கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நீங்கள் பெரிய அளவிலான கிரிக்கெட் விளையாட உள்ளே நுழையும் போது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாட உங்களை நீங்களே ஒரு தூண்டுதலுக்கு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களை நீங்களே செட் செய்து கொள்ள வேண்டும். கில் விளையாடும் விதமும் தற்போது மேம்பட்டிருக்கிறது. அவர் தனக்குத்தானே நேரம் கொடுத்து தன்னை செட் செய்து கொள்வதால் அவரால் சிறப்பாக விளையாட முடிகிறது.
இதையும் படிங்க:இந்திய அணியில் இருந்து ஓய்வா.?இதை நான் பல தடவை பார்த்துட்டேன்.. எனது பதில் இதுதான் – ரோஹித் சர்மா பேட்டி
மேலும் வேகப்பந்து வீச்சாளர்கள் அவருக்கு பவுன்ஸ் பந்தை வீச முடிவதில்லை. அப்படி வீசினால் அவர் பின் காலில் நகர்ந்து பந்தை அழகாக ஒரு பஞ்ச் செய்து விடுகிறார். மேலும் ரோகித் சர்மா செய்வதுபோல கில் சதத்தை நோக்கி விளையாட விரும்புகிறார். மேலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை பார்க்கும் போது 130,140 ரன்கள் எடுக்க பசி இல்லாதவர்கள் போல் தெரிகிறது. 50 முதல் 60 ரன்கள் எடுத்தாலே அவர்கள் குளிர்ச்சியான நிலைக்கு சென்று விடுகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இதன் மூலமாக இன்னொரு போட்டி விளையாட வாய்ப்பு கிடைக்கிறது இதுதான் அவர்களிடத்தில் இருக்கும் பிரச்சனை’ என்று கூறி இருக்கிறார்.

