இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் இதற்காக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் மிகத் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.
இத சூழ்நிலையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரோஹித் சர்மா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு காரசாரமான பதில்களை அளித்திருக்கிறார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதாகவும் ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த போவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
இந்த சூழ்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருக்கும் ரோகித் சர்மாவிடம் டெஸ்ட் தொடரில் அசத்தாத நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்படுவீர்களா? எனவும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் முடிந்ததும் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெறப் போகிறீர்களா? எனவும் கேள்விகள் கேட்கப்பட்டது.
இதற்கு ரோகித் சர்மா பதில் அளிக்கும் போது “என்ன மாதிரியான கேள்வி இது. டெஸ்ட் கிரிக்கெட் ஒருநாள் கிரிக்கெட் என்பது வித்தியாசமான ஃபார்மேட் மற்றும் நேரத்தை பொறுத்தது. மேடு பள்ளங்கள் எப்போதுமே இருக்கும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். மேலும் எனது கேரியரில் இதை நான் பலமுறை எதிர்கொண்டு உள்ளேன் எனக்கு இது புதிதல்ல. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியும் புதிது என்பதால் வரும் காலத்தை மட்டுமே யோசிக்கிறேன் கடந்த காலத்தை பற்றி நினைப்பது இல்லை.
இதையும் படிங்க:உங்கள கெஞ்சி கேட்டுகிறேன்… பும்ரா விசயத்துல அந்த தப்ப திரும்ப பண்ணாதீங்க… கம்பீர், ரோஹித் சர்மாவிற்கு ரவி சாஸ்திரி கோரிக்கை
மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும்போது எனது ஓய்வை பற்றி இப்போது பேசுவதில் நியாயம் இருக்கிறதா? இது போன்ற வதந்திகள் பல காலமாக உலா வந்து கொண்டிருக்கிறது. அதற்கான விளக்கத்தை கொடுப்பதற்காக நான் இங்கு இல்லை. தற்போதைய போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளேன் அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்” என கூறி இருக்கிறார். எனவே நாளை ஒரு நாள் போட்டியில் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடுவார்கள் என்று இந்திய ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

