உங்கள கெஞ்சி கேட்டுகிறேன்… பும்ரா விசயத்துல அந்த தப்ப திரும்ப பண்ணாதீங்க… கம்பீர், ரோஹித் சர்மாவிற்கு ரவி சாஸ்திரி கோரிக்கை

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை நாக்பூரில் தொடங்க இருக்கிறது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இங்கிலாந்து மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா இடம் பெற்றிருந்தார். எனினும் அவர் போட்டியில் பங்கேற்பது உறுதியாகத் தெரியவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்க்கர் ஆகியோர் தெரிவித்தனர்.

- Advertisement -

மேலும் நாளை தொடங்க இருக்கும் ஒரு நாள் போட்டி தொடருக்கான இந்திய அணி நாக்பூரில் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் பும்ரா அணியுடன் இணையவில்லை. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் வருன் சக்கரவர்த்தி இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இதனால் பும்ரா சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறுவாரா.? என்ற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வல்லுனர்களுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் கம்பீர் ஆகியோர் பும்ரா விஷயத்தில் முன்னர் செய்த தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்ற இந்தியா 5 போட்டிகளை கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தாலும் ஜஸ்ப்ரீத் பும்ரா மிகச் சிறப்பாக பந்து வீசி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக அறிவிக்கப்பட்டபோது முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசிய அவர் இரண்டாவது இன்னிங்ஸில் காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் 2022 ஆம் வருடம் இந்திய அணி நிர்வாகம் பும்ராவிற்கு செய்த தவறை மீண்டும் திருப்பி செய்ய வேண்டாம் என ரவி சாஸ்திரி தெரிவித்திருக்கிறார். கடந்த 2022-ம் வருடம் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக காயத்திலிருந்து குணமடைந்த பும்ராவை இந்திய அணி நிர்வாகம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடருக்கு தேர்வு செய்தது. அப்போது மீண்டும் காயமடைந்த பும்ரா அறுவை சிகிச்சை செய்து 10 மாத ஓய்விற்குப் பிறகு 2023 ஆம் வருட ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட உடல் தகுதி பெற்று இந்திய அணிக்கு திரும்பினார்.

- Advertisement -

இதனை சுட்டிக்காட்டி பேசிய ரவி சாஸ்திரி, பும்ரா விஷயத்தில் இந்திய அணி நிர்வாகம் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் என கூறி இருக்கிறார். பும்ராவை இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடர்களில் உடனடியாக களமிறக்குவது அவரது கிரிக்கெட் வாழ்வையே முடிவுக்கு கொண்டு வரலாம் எனவும் தெரிவித்திருக்கிறார். கடந்த 2022 ஆம் வருட டி20 உலக கோப்பைக்கு முன்பாக காயமடைந்த பும்ராவை இந்திய அணி நிர்வாகம் அவசரமாக களமிறக்கியது.

இது பும்ராவின் காயம் மேலும் தீவிரமடைய காரணமாக அமைந்தது. இதனால் பும்ரா அறுவை சிகிச்சை செய்து 10 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார். தற்போது ஆஸ்திரேலிய தொடரில் காயமடைந்த பும்ராவை மீண்டும் அவசரமாக களமிறக்கினால் அவரது கிரிக்கெட் வாழ்வே முடிவு பெறும் அபாயம் இருக்கிறது எனவும் ரவி சாஸ்திரி எச்சரித்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக பேசிய அவர் பும்ரா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவில்லை என்றால் அது இந்திய அணியின் வெற்றி விகிதத்தை பெருமளவு பாதிக்கும் எனினும் இந்திய அணியின் எதிர்காலம் கருதி பும்ராவின் விஷயத்தில் இந்திய அணி அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரிடம் கோரிக்கை வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles