இந்திய கிரிக்கெட் வாரியம் அடுத்ததாக நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு விளையாட உள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியை தற்போது அறிவித்திருக்கிறது.
இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பும்ரா சாம்பியன் டிராபி தொடரில் விளையாடுவாரா மற்றும் அணியில் எதற்காக மாற்றங்கள் செய்யப்பட்டன என்பது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை ஏற்கனவே அறிவித்த நிலையில் இந்திய அணி ஒரு சில வீரர்களின் உடல் தகுதி பிரச்சனையை கருத்தில் கொண்டு சில நாட்கள் அவகாசம் கேட்ட நிலையில் தற்போது 15 பேர் கொண்ட இறுதி அணியை அறிவித்திருக்கிறது.
ரோகித் சர்மா கேப்டன் ஆக பதவி வகிக்கும் இந்த அணியில் கில் துணை கேப்டனாக பதவி வகிக்கிறார். இதன் மூலமாக அவர் தொடக்க வீரராக தொடர்ந்து களம் இறங்குவார் என்று மறைமுகமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சிவப்பு பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜெய்ஸ்வால் இந்த தொடரில் அறிமுகமாக இருக்கிறார். மேலும் முகமது ஷமி காயம் குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப உள்ள நிலையில் தற்போது காயத்தால் அவதிப்பட்டு வரும் பும்ரா இந்த அணியில் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே அணியில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து ரோகித் சர்மா கூறும்போது “ஜெய்ஸ்வால் கடந்த இரண்டு வருடங்களாகவே இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். எனவே அதன் அடிப்படையில் அவரை தேர்வு செய்திருக்கிறோம். அவர் ஒரு நாள் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்றாலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையில் அவரை தேர்வு செய்துள்ளோம். மேலும் பும்ரா சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக உடல் தகுதி பெறுவாரா என்று தெரியவில்லை.
இதையும் படிங்க:ரோகித் கேப்டனா இருந்தா.. விராட் கோலி விளையாட விரும்பலனு நான் சொன்னேனா.. பார்த்தீவ் பட்டேல் விளக்கம்
எனவே அவருக்கு பேக் அப் வீரராக அர்ஸ்தீப் சிங்கைத் தேர்வு செய்து இருக்கிறோம். இந்தத் தொடரில் முகமது சிராஜை நாங்கள் தேர்வு செய்யவில்லை. ஏனென்றால் பந்து பழையதாகும் போது அவரால் பெரியத் தாக்கத்தை கொடுக்க முடியவில்லை. இதனால் நாங்கள் அவரை தேர்வு செய்யவில்லை” என்று கூறுகிறார்.

