இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ரோஹித் சர்மாவின் தலைமையில் விளையாட விரும்பவில்லை என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல் கூறியதாக ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது.
இந்த சூழ்நிலையில் தற்போது அது குறித்து விரிவான விளக்கத்தை பார்த்தீவ் பட்டேல் கூறி இருக்கிறார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கி வரும் விராட் கோலி சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் என இரண்டிலும் மோசமான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்கு தற்போது தலைமை பயிற்சியாளராக பதவியேற்ற கௌதம் கம்பீர் இளம் வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிப்பதாகவும், அதில் வீரர்களுக்கு உடன்பாடு இல்லாததால் வேண்டுமென்றே மோசமாக விளையாடி கம்பீர் பதவி விலக திட்டம் தீட்டுவதாக அறிக்கைகள் வெளியானது.
மேலும் விராட் கோலி கௌதம் கம்பீர் தலைமையில் விளையாட விரும்பவில்லை எனவும், ரோகித் சர்மா கேப்டனாக இருக்கும் இந்திய அணிக்கு விராட் கோலி விளையாட மறுக்கிறார் எனவும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல் கூறியதாக ஒரு செய்தி அண்மையில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. ரோகித் சர்மா டெஸ்ட் கேப்டனாக இருக்கிற காரணத்தால் விராட் கோலி இப்படி செய்கிறார் எனவும் செய்திகள் வெளியானது.
இந்த சூழ்நிலையில் பார்த்தீவ் பட்டேல் இது குறித்து பேசியதாவது “ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து நான் கூறியதாக பரவிய செய்துகள் அனைத்துமே போலியானவை. ஒரு செய்தி வெளி வரும்போது அதனுடைய உண்மை தன்மையை ஆராய வேண்டும். தயவு செய்து உங்களுக்கு கிடைக்கும் செய்திகளின் உண்மை தன்மையை ஆராய்ந்து பாருங்கள். ஏனென்றால் உங்களுக்கு தொடர்ந்து தவறான செய்திகள் வருகிறது. நான் கூறியதாக சொல்வது முற்றிலும் போலியான செய்தி” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:தொடர் தோல்விகள்.. 6 கிடுக்குப்பிடி விதிகளை போட்ட பிசிசிஐ.. மாட்டிக்கொண்ட இந்திய வீரர்கள்.. முழு விபரம்
விராட் கோலியின் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக தற்போது ரஞ்சி தொடரில் டெல்லி அணிக்காக விளையாடப் போகிறார் என்ற தகவல் வெளிவந்த நிலையில் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக விராட் கோலி முதல் சுற்று ஆட்டங்களை தவற விடுவார் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அடுத்த சுற்று ஆட்டங்களில் விராட் கோலி நிச்சயமாக டெல்லி அணிக்கு விளையாடுவார் என்று நெருங்கிய கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன.

