தொடர் தோல்விகள்.. 6 கிடுக்குப்பிடி விதிகளை போட்ட பிசிசிஐ.. மாட்டிக்கொண்ட இந்திய வீரர்கள்.. முழு விபரம்

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருகிறது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகிய இரண்டும் இந்திய அணியின் தோல்விகளில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு 6 புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் கிரிக்கெட் போட்டிகளில் தங்களது குடும்பத்தாரை அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். மேலும் அவர்களோடு போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கு பயணிப்பது, தங்கள் விரும்பிய சமையல்காரர்களை உடன் கூட்டி செல்வது என பல்வேறு சலுகைகளை இந்திய வீரர்கள் வைத்திருந்த நிலையில் அதற்கு தற்போது பிசிஐ முட்டுக்கட்டை போட்டுள்ளது.

- Advertisement -

இதில் முதலாவதாக வீரர்கள் மைதானத்திற்கோ அல்லது பயிற்சிக்கோ செல்லும் போது அணி வீரர்களோடு மட்டுமே பயணம் செய்ய வேண்டும். தனியாகவோ அல்லது குடும்பத்தாரையோ உடன் அழைத்துச் செல்லக்கூடாது. மேலும் ஒரு தொடர் 45 நாட்களுக்கு மேல் நடக்கிறது என்றால் இந்திய வீரர்களோடு அவர்களது குடும்பத்தார் இரண்டு வாரங்கள் மட்டுமே தங்க அனுமதி உள்ளது. அதற்கு மேலே யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை.

மூன்றாவதாக சுற்றுப் பயணத்தில் வீரர்கள் தனிப்பட்ட படப்பிடிப்பிலோ அல்லது விளம்பர நிகழ்ச்சிகளிலோ பங்கேற்கக் கூடாது என்று பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் இதில் அவ்வப்போது செய்து வந்த நிலையில் அதற்கும் தற்போது பிசிசிஐ அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் முக்கிய விதியாக ஊதிய ஒப்பந்தத்தில் இருக்கும் இந்திய வீரர்கள் அனைவரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் கண்டிப்பாக விளையாடவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க:இந்த மாதிரி நியூஸ் பார்த்தா.. எனக்கு கோபம் வருது அதே நேரம் சிரிப்போம் வருது.. காயம் குறித்து பும்ரா வெளியிட்ட தகவல்

இந்திய சீனியர் வீரர்கள் யாரும் பெரும்பாலாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது இல்லை. சமீபத்திய இரண்டு அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மோசமான தோல்விகளை தொடர்ந்து சீனியர் ஜூனியர் என்ற பாரபட்சம் இல்லாமல் இந்திய வீரர்கள் அனைவரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் பங்கு பெற வேண்டும் என்ற நிபந்தனை உண்டாக்கி இருக்கிறது. மேலும் வீரர்களது மேலாளர், சமையல்காரர்கள், உதவியாளர் ஆகியோரை கூட்டிச் செல்லவும் தடை விதித்துள்ளது. மேலும் இந்த விதிமுறைகளை பின்பற்ற தவறும் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. இந்த விதிகள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் தற்போது சிறிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் உண்டாக்கி இருக்கக்கூடும் என்பதில் சந்தேகம் இல்லை.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles