இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ரெஸ்ட் தொடரில் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் அவர் சாம்பியன் டிராபி தொடரில் விளையாட மாட்டார் என்ற கருத்துக்கள் பரவி வந்தது.
இந்த சூழ்நிலையில் பும்ரா தற்போது அது குறித்து தெளிவான விளக்கத்தை கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா பாதியிலேயே போட்டியை விட்டு வெளியேறினார். இந்த சூழ்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு முழு ஓய்வு தேவை என்றும் இதனால் அவர் சில தொடர்களில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படலாம் என்று சில தினங்களுக்கு முன்பாக தகவல்கள் பரவியது.
மேலும் சில தகவல்கள் பும்ராவிற்கு முழுமையான ஓய்வு தேவை எனவும் அதனால் படுக்கையிலேயே சிறிது காலத்திற்கு முழுவதுமான ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவித்ததாக நேற்று முன்தினம் சில செய்திகள் வெளியானது. இதனால் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் மற்றும் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று ஆட்டங்களில் பங்கேற்க மாட்டார் எனவும் நேரடியாக அரை இறுதிக்கு மட்டுமே விளையாடுவார் என்றும் தகவல்கள் வெளிவந்தது.
மேலும் இதற்கு முன்பாக பும்ரா அறுவை சிகிச்சை செய்த நியூசிலாந்தில் உள்ள மருத்துவ குழுவினருடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இப்படி தொடர்ச்சியாக பும்ரா குறித்து ஏதேனும் ஒரு தகவல்கள் அதிகாரப்பூர்வ மற்ற நிலையில் வந்து கொண்டிருந்தபோது தற்போது பும்ரா அது குறித்து தனது விரிவான விளக்கத்தை கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:கோலி முன்னிலையில் மோர்கல் செய்த வேலை.. கடுப்பான கம்பீர்.. பயிற்சியாளர் பதவிக்கு ஆபத்து.. முழு விபரம்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” போலியான தகவல்களை எப்போதும் பரப்புவது எளிதான விஷயம் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இது ஒரு இடத்தில் கோபத்தை வரவழைத்தாலும் இதனைப் பார்த்தபோது எனக்கு சிரிப்பு தான் வந்தது. என் குறித்து பரவிய தகவல்கள் அனைத்துமே போலியானவை” என்று கூறியிருக்கிறார். இதன் மூலமாக பும்ரா விரைவில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவரது அதிகாரப்பூர்வமான தகவல் தற்போது இந்திய ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் ஜஸ்பிரித் பும்ரா அடுத்ததாக நடைபெற உள்ள சாம்பியன் டிராபி தொடருக்கு விரைவில் குணம் அடைந்து விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்

