இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கு தயாராகும் வகையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மோர்னே மோர்கலை விராட் கோலி முன்னிலையில் திட்டி இருப்பதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல் கசிந்துள்ளது.
ராகுல் டிராவிட்டுக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றதில் இருந்து இந்திய அணி வரிசையாக தோல்விகளை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இதுவரை இந்திய அணி விளையாடிய கடைசி 8 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 7 போட்டிகளில் வரிசையாக தோற்று இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது பயிற்சி அமர்வுக்கு இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தாமதமாக வந்ததாக தெரிகிறது.
எப்போதுமே பயிற்சியில் ஒழுக்கத்தை கடைபிடிக்கும் கம்பீர் மோர்கலை விராட் கோலி முன்னிலையில் கண்டிப்புடன் நடந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது சம்பந்தமாக பிசிசிஐக்கு அறிக்கையை கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்திய அணியின் பயிற்சி குழு தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய வீரர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சிகள் தரமான அளவில் இருக்கிறதா? என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர்களான அபிஷேக் நாயர் மற்றும் டென் டஸ்கோதே ஆகியோரின் பதவிகள் ஆபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக வெளிவந்துள்ள அறிக்கையில் “பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் சர்மா முக்கியமான ஸ்கேனரில் இருக்கிறார். பயிற்சியாளர் கம்பீருக்கு போதிய சர்வதேச அனுபவம் இருக்கிறது. ஆனால் அபிஷேக் நாயருக்கு போதிய சர்வதேச அனுபவம் இல்லை எனவே அவர் இந்திய வீரர்களுக்கு பயிற்சியில் புதிய விஷயங்களை செய்கிறாரா? என்று பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:2011 மாதிரி.. ரோஹித் கோலிக்கு இதை செய்ய வேண்டாம்.. அவங்க நிச்சயமா வேணும் – யோகராஜ் சிங் கருத்து
இதைப் போலவே மற்றொரு துணை பயிற்சியாளரான டென் டஸ்கோத் அவரும் போதிய சர்வதேச அனுபவம் இல்லாமல் இருக்கிறார். எனவே இவர்கள் வழங்கும் பயிற்சிகள் இந்திய அணிக்கு போதுமானதாக இருக்கிறதா என்று தற்போது கேள்விகள் எழுந்துள்ளது. இந்திய அணியின் தோல்விகள் தொடரும் பட்சத்தில் இவர்கள் பயிற்சிகளின் தரத்தை ஆராயவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

