எல்லாம் முடிஞ்சு போச்சு.. மீண்டும் அறுவை சிகிச்சையில் பும்ரா.. ஐபிஎல் தொடருக்கு கேள்விக்குறி.. முழு விபரம்

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக வெளியேறினார்.

- Advertisement -

இந்த நிலையில் அவரது காயம் குறித்து தற்போது வெளிவந்திருக்கும் தகவலால் இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

பும்ரா கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு கிட்டத்தட்ட ஒரு வருட காலம் இந்திய அணியை விட்டு வெளியேறி இருந்தார். அதற்குப் பிறகு தனது அபார பந்துவீச்சு மூலமாக இந்திய அணிக்கு அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வந்த அவர் சமீபத்தில் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் தனது அபார பந்துவீச்சின் மூலமாக இந்திய அணி உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

அதற்குப் பிறகு முக்கிய தொடர்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த பும்ரா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது மீண்டும் காயமடைந்து வெளியேறினார். அப்போது அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டு பார்த்த நிலையில் பும்ராவுக்கு காயத்தின் தன்மை தீவிரமாக இல்லை எனவும் அதனால் பயப்பட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின் படி அவர் தற்போது ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் அடுத்ததாக நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடர், அதற்குப் பிறகு நடைபெற உள்ள சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் மேலும் இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடர் போன்ற பெரிய தொடர்களில் விளையாட முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு தற்போது முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் இன்னும் ஆறு மாத காலத்திற்கு அவரால் விளையாட முடியாத நிலை ஏற்படும்.

- Advertisement -

இதையும் படிங்க:விராட் கோலி விளையாட விட்டுருக்க கூடாது.. எதுக்குமே ஒரு எல்லை இருக்கு.. அதை அவர் தாண்ட கூடாது – இங்கி ஹார்மிசன் பேட்டி

அப்படி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இந்திய அணிக்குள் மீண்டும் அவர் விளையாட வந்தால் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் மட்டுமே அவர் களமிறங்கவார் என்று கூறப்படுகிறது. தற்போது இது இந்திய அணிக்கும் பும்ராவிற்கும் பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில் என்ன மாதிரியான முடிவுகள் இதற்குப் பிறகு எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இது தற்போது இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles