தோனி மாதிரி இதை செய்வது கடினம்.. என் கிரிக்கெட் வாழ்க்கை முடிய வெகு தொலைவில் இல்லை.. கேஎல் ராகுல் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கையின் நட்சத்திரமாக திகழ்ந்த கேஎல் ராகுல் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் மூலம் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தனது ஓய்வு குறித்து சில நுணுக்கமான விஷயங்களையும் மனதில் எண்ண ஓட்டங்களையும் கே எல் ராகுல் வெளிப்படுத்தியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் சின்ன விராட் கோலி என்று அழைக்கப்பட்டவர் கே எல் ராகுல் அந்த அளவிற்கு இவரது பேட்டிங் திறமை அபாரமாக இருந்தது. இந்திய அணியில் தொடக்க காலத்தில் பயமின்றி அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். அதன் எதிரொலி ஐபிஎல் தொடரிலும் பிரதிபலித்தது. ஐபிஎல் தொடரில் முதலில் பெங்களூர் அணிக்காக விளையாடிய கேஎல் ராகுல் அதற்குப் பிறகு பஞ்சாப் அணிக்கு சென்ற போது தனது முழு திறமையையும் வெளிக்காட்டினார்.

- Advertisement -

திறமைக்கு எந்த ஒரு குறைவும் இல்லாத கே.எல் ராகுல் இக்கட்டான சூழ்நிலைகளில் பதட்ட சூழ்நிலை காரணமாக தடுமாறி விடுவார் என்கிற விமர்சனம் உண்டு. இந்த சூழ்நிலையில் தற்போது கே எல் ராகுல் தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போகும் தருணம் மிக தொலைவில் இல்லை என்றும் அது சீக்கிரத்தில் நடக்கப் போவதாக உணர்கிறேன் என்று சில நுணுக்கமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இது குறித்து கே.எல் ராகுல் விரிவாகக் கூறும் போது “நான் எந்த விதமான பாதுகாப்பு இல்லாமல் இதை உணரவில்லை. ஆனால் எனது கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வரும் என்பது போல தோன்றுகிறது. எனக்கு சீக்கிரம் கிரிக்கெட் வாழ்க்கை முடிய போவதாக உணர்கிறேன். நீங்கள் 40 வயதிலும் உடல் தகுதியுடன் பிட்டாக இருக்கலாம் ஆனால் அது எல்லோராலும் முடியாது.

- Advertisement -

மகேந்திர சிங் தோனி தற்போது 43 வயது வரை ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் மட்டுமே இந்த வயதிலும் விளையாடுகிறார். ஆனால் அது சர்வதேச தொடரில் விளையாடுவது என்பது மிகவும் கடினமான காரியம். நான் எனது 29 வது வயது வரை எதையும் உணராமல் இருந்தேன். ஆனால் 29வது வயதிலிருந்து 30வது வயதிற்கு அடி எடுத்து வைக்கும் போது சுரங்கப்பாதையில் ஒரு வெளிச்சத்தை பார்ப்பது போல உணர்கிறேன்.

இதையும் படிங்க:6 சிக்ஸ்.. 8 பவுண்டரி.. சிஎஸ்கே 8 கோடி வீரர் மாஸ் பேட்டிங்.. செய்வது அறியாது திகைத்த பவுலர்கள்.. தோனி எடுத்த முடிவு எப்போதும் தப்பாது

இன்னும் பத்து வருடங்கள் என்னால் கிரிக்கெட் விளையாட முடியுமா? என்பது சந்தேகமே. அதனால் எனது கிரிக்கெட் வாழ்க்கை மிக விரைவில் முடியப்போவது போல எனக்கு தோன்றுகிறது. நான் எப்போதும் கிரிக்கெட் குறித்து தான் சிந்தித்துக் கொண்டிருப்பேன். ஆனால் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவதற்கு குறைந்த காலங்களில் உள்ளன “என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles