இந்த இந்திய வீரரை.. ஆஸ்திரேலியா மக்களுக்கும் பிடிக்கும்.. அவர் விளையாடிய விதம் அப்படி- மேத்யூ ஹைடன் பேட்டி

இந்திய அணி வருகிற நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரான பார்டர் கவாஸ்கர் ட்ராபி கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் சியாட் கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் இந்திய அணி வீரர் குறித்து முக்கியமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு முறையாக பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடரை வென்று சாதனை படைத்திருக்கிறது. எனவே இந்த முறை மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்போடு இந்திய அணி களம் இறங்க உள்ளது. மேலும் இந்த முறை எப்படியாவது இந்திய அணியை வீழ்த்தி ஆக வேண்டும் என்ற உத்வேகத்தில் ஆஸ்திரேலியா அணியும் இருக்கிறது.

- Advertisement -

இதனால் இந்த இரண்டு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு சரிசமமாக இருக்கும் என்று ஹைடன் கூறியிருக்கும் நிலையில் கடந்த முறை ஆஸ்திரேலியாவில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் விளையாடிய விதம் குறித்து பாராட்டி பேசி இருக்கிறார். மேலும் பண்ட் விளையாடிய விதத்திற்கு ஆஸ்திரேலியா மக்களும் அவரை விரும்புவார்கள் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணியில் விராட் கோலி போன்ற மிகத் தரமான வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் கடந்த முறை ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தினார். அங்கு அவர் விளையாடிய விதத்திற்கு ஆஸ்திரேலியா மக்களும் அவரை விரும்புவார்கள். ரிஷப் பண்ட் போன்ற வீரர்களுக்கு மஸல் மெமரி மற்றும் வெற்றிக்கான தாகம் அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

ரிஷப் பண்ட் விளையாடிய விதம் அற்புதமாகவும், புதுமையானதாகவும் இருந்தது. மேலும் இந்திய அணியில் விராட் கோலி போன்ற தரமான வீரர்களும் இருக்கின்றனர். எனவே அவரும் இந்த முறை பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தயாராக இருக்கிறார். இரண்டு அணிகளுமே தற்போது வலுவாக இருப்பதால் வெற்றி வாய்ப்பு சரிசமமாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:சும்மா ஒன்னும் இல்ல .. எனக்கு இந்த டெக்னிக்கை கத்துக்க இரண்டு வருஷம் ஆச்சு.. ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி

புஜாரா ஒருவேளை இந்திய அணியில் இருந்தால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இந்திய அணிக்குதான் இருக்கும் என்று கூறியிருப்பேன் எனவும் ஹைடன் கூறியிருக்கிறார். வருகிற நவம்பர் மாதம் முதல் இந்த இரு அணிகளுக்கிடையே டெஸ்ட் தொடர் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை முன்னணி வீரர்கள் இல்லாமலே சென்று டெஸ்ட் தொடரை வென்ற இந்திய வீரர்கள் தற்போது மிகுந்த நம்பிக்கையோடு இருப்பார்கள் என்றும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles