சும்மா ஒன்னும் இல்ல .. எனக்கு இந்த டெக்னிக்கை கத்துக்க இரண்டு வருஷம் ஆச்சு.. ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி டெஸ்ட் பந்துவீச்சாளராக திகழும் ரவிச்சந்திரன் அஸ்வின் டிஎன்பிஎல், ஐபிஎல் போன்ற உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தான் ஒருவகை பந்துவீச்சை கற்றுக் கொள்ள எனக்கு இரண்டு வருடம் ஆனது என்று சில முக்கிய கருத்துக்களைக் கூறி கவனம் ஈர்த்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின், மற்ற வீரர்களை காட்டிலும் சற்று தனித்து நிற்கக்கூடிய ஒரு பிளேயர். கிரிக்கெட் குறித்து எந்த விஷயமாக இருந்தாலும் அதனை கற்றுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டுவார். அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் தனது யூடியூப் சேனலிலும் கிரிக்கெட் குறித்த தகவல்களை மக்களுக்கு நன்றாக எடுத்துக் கூறுவார்.

- Advertisement -

பந்துவீச்சில் முக்கிய கவனம் பெறும் பந்துவீச்சான கேரம் பாலை இலங்கை அணியின் வலது கை சுழற் பந்துவீச்சாளர் ஆன அஜந்தா மெண்டிஸ் வீசி ஒரு காலத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்துக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு அவரது பந்து வீச்சு டெக்னிக்கை கண்டறிந்த இந்திய பேட்ஸ்மேன்கள் அவரது பந்துவீச்சை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். இந்த சூழ்நிலையில் அத்தகைய பந்துவீச்சை கற்றுக்கொள்ள இரண்டு வருடம் ஆனது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் 2006 அல்லது 2007 ஆம் ஆண்டில் முதன்முதலாக வலைப் பயிற்சியில் கேரம் பால் வகையான பந்துகளை வீச ஆரம்பித்தேன். அப்போது நான் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமாகி இரண்டாவது சீசன் இருக்கும். 2008 ஆம் ஆண்டில் விஜய் ஹசாரே டிராபியில் விளையாடிய போது நான் இத்தகைய பந்துகளை வீசுவதற்கு ஆரம்பித்தேன்.

- Advertisement -

இந்த பந்துகளை வீசுவதற்கு எனக்கு இரண்டு வருடங்கள் தேவைப்பட்டது. இதற்காக நான் தீவிர பயிற்சிகளை எடுத்தேன். இந்த வகையான பந்துளை நான் 2010ஆம் ஆண்டில் வீசியபோது இது குறித்து நான் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தேன்” என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:பும்ரா அந்த 2 பேர் கூட கம்பேர் பண்ண கூடாது.. என்ன அவங்ககிட்ட கூடுதலா இந்த திறமை இருக்கு – பாசித் அலி பேட்டி

அஸ்வின் ஐபிஎல் தொடரில் தனது பந்துவீச்சில் ரன்கள் அதிகமாக செல்லும்போது இத்தகைய பந்துகளை வீசி தனது பந்துவீச்சு எக்கானமியை சிறப்பாக வைத்துக் கொள்வார். ஐபிஎல் தொடரில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக் அஸ்வினை சயின்டிஸ்ட் என்று அவ்வப்போது கூறுவார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles