பஸ்ல போனா செல்போனையும்.. டாஸ் போடறப்போ என்ன செலக்ட் பண்ணனும்னு மறக்கும் ரோஹித் இதை மட்டும் மறக்கவே மாட்டார்.. விக்ரம் ரத்தோர் பேட்டி

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக விளங்கி வரும் ரோகித் சர்மா டி20 தொடரில் இருந்து ஓய்வு பெற்று தற்போது இரண்டு வடிவ கிரிக்கெட் தொடர்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மாவின் ஞாபக மறதி குறித்து இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் ஆன விக்ரம் ரத்தோர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி டி20 உலக கோப்பையை கைப்பற்றி பல வருட கனவை நிறைவேற்றியுள்ளது. அதற்கு ரோகித் சர்மா கேப்டன் ஆகவும் பேட்ஸ்மேனாகவும் மிகச் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். ஒரு பேட்ஸ்மேனாக தனது அணி எப்படி ஆட வேண்டும் என்று அவரே தொடக்க வீரராக களம் இறங்கி ஒரு நல்ல முன் உதாரணமாக அமைந்தார்.

- Advertisement -

அவரது அதிரடி ஆட்டத்தின் மூலமாகவே இந்திய அணி சிறப்பான தொடக்கத்தைப் பெற்று அதற்குப் பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் பயமின்றி விளையாட உதவியது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ரோஹித் சர்மா சரியான ஞாபக மறதி கொண்டவர் என்றும் ஆனால் எதை மறந்தாலும் தனது போட்டி திட்டத்தை மட்டும் மறக்க மாட்டார் என சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ரோஹித் சர்மா டாஸ் போடும்போது பேட்டிங் செய்ய முடிவு எடுத்தோமா? அல்லது பந்து வீச முடிவு எடுத்தோமா? என்பதை மறந்து விடுவார். அதேபோல இந்திய அணியின் பேருந்திலும் அவரது செல்போன் மற்றும் சில எலக்ட்ரானிக் பொருட்களையும் மறந்து வைத்து விடுவார். ரோஹித் ஒரு சரியான ஞாபக மறதி கொண்டவர்.

- Advertisement -

ஆனால் எதை மறந்தாலும் தனது போட்டி திட்டத்தினை மட்டும் மறக்கவே மாட்டார். தன்னுடைய கேம் ப்ளானை எப்போதும் தெளிவாக வைத்திருப்பார். பந்துவீச்சாளர்களோடு அமர்ந்து அவர்கள் என்ன செயல்படுத்த விரும்புகிறார்கள் என அனைத்தையும் கேட்டு தெரிந்து கொள்வார். அனைவரின் தேவைகளை அறிந்து செயல்படக்கூடிய ஒரு மிகச் சிறந்த கேப்டன் ஆக ரோஹித் சர்மா விளங்குகிறார்.

இதையும் படிங்க:கஷ்டமான கேள்விதான்.. தோனி,டிவில்லியர்ஸில் எனக்கு புடிச்ச வீரர் இவர்தான்.. கோலி தைரியமான பதில்.. ஃபேன்ஸ் மகிழ்ச்சி

அவரைப் போன்ற ஒரு கேப்டனை இதற்கு முன்னர் நான் பார்த்ததில்லை” என்று விக்ரம் ரத்தோர் கூறியிருக்கிறார். ரோகித் சர்மா டாஸ் வென்ற பிறகு பேட்டிங்கா பவுலிங்கா? என்று தேர்வு செய்ய முடியாமல் குழம்புவது, மேலும் அணி வீரர்களின் பெயர்களைச் சொல்ல மறப்பது என்று வீடியோ ஒன்றின் தொகுப்பு இணையத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles