ஐபிஎல் தொடரின் அடுத்த சீசன் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த வருட இறுதியில் அதன் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் கோரிக்கையை பிசிசிஐயிடம் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மகேந்திர சிங் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிகப்பெரிய தியாகம் செய்திருக்கிறார் என்று ரசிகர்கள் அவரை தற்போது பார்ட்டி வருகின்றனர்.
2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன் முறையாக களம் இறங்கிய போது சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி கொண்டுவரப்பட்டார். அந்த கனம் முதலே சென்னை ரசிகர்களின் மிகுந்த அன்பிற்கு ஆளானார் தோனி. மேலும் அவரது சிறந்த செயல்பாட்டின் காரணமாகவும் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில சீசன்களாகவே காயத்தால் அவதிப்பட்டு வரும் தோனி மேலும் வயது முதிர்வு காரணத்தாலும் தோனி இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளிவந்தது. இது வைரலான நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட மகேந்திர சிங் தோனி இந்த முறை தக்கவைக்கப்படும் வீரர்களின் எண்ணிக்கையை பொறுத்து எனது முடிவு இருக்கும் என்று கூறினார்.
இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் எனவும், மூன்று வீரர்களை ஆர்டிஎம் மூலம் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் எனவும் பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி தன்னை சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரராக கருதி தனது சம்பளத்தை பாதியாக குறைக்க முடிவெடுத்துள்ளார் என்ற தகவல் வெளிப்படுகிறது.
ஏனென்றால் சர்வதேச வீரர் வாங்கும் ஊதியத்தை விட அன் கேப்டு பிளேயர் அதாவது சர்வதேச தொடரில் விளையாடாத வீரர் என்று அறிவிக்கும் போது அவரது சம்பளம் பாதியாக குறையும். இதனால் அணி நிர்வாகமும் மேலும் பல திறமையான வீரர்களுக்கு பணத்தை முதலீடு செய்ய இது ஒரு சிறந்த வழியாக அமையும். இந்த காரணத்தால் அணியின் நலன் கருதி தோனி இந்த முடிவை மேற்கொண்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் தற்போது தோனியை கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க:நீங்க நினைக்கிற மாதிரி நாங்க அடிக்கடி மீட் பண்ண மாட்டோம்.. கோலிக்கும் எனக்கும் இருக்கிற உறவு இதுதான்.. தோனி ஓபன் டாக்
மேலும் தோனியை அன்கேப்டு பிளேயராக கருத வேண்டும் எனவும் சிஎஸ்கே ஐபிஎல் நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் அடுத்த சீசனில் தோனி களம் இறங்க அதிக வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

