இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி சுமாரான ரன்களையே வெற்றி இலக்காக நிர்ணயித்திருக்கிறது.
இலங்கை அணி தரப்பில் சிஎஸ்கே வீரரான தீக்ஷானா சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
மோசமான வானிலை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்தது. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சிவம் துபே ஆகியோர் மீண்டும் அணிக்குள் கொண்டுவரப்பட்டனர். முதலில் பேட்டிங் தொடங்கிய இந்திய அணி ஜெய்ஸ்வால் 10 ரன்களில் வெளியேறினார். அதற்குப் பிறகு மூன்றாவது வரிசையில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் இந்த முறையும் நான்கு பந்துகளை எதிர்கொண்ட நிலையில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
ஏற்கனவே இரண்டாவது போட்டியிலும் டக் அவுட் ஆகி வெளியேறிய சாம்சன் இந்த முறையும் அதேபோல வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்தது. அதற்குப் பிறகு ரிங்கு சிங் ஒரு ரன்னிலும், சூரியகுமார் யாதவ் 8 ரன்னிலும் வெளியேற, சிவம் துபே 13 ரன்களில் வெளியேறினார்.
மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரர் கில் ஓரளவு நிதானமாக விளையாடி 37 பந்துகளில் மூன்று பவுண்டரிகளுடன் 39 ரன்கள் குவித்தார். பிறகு கடைசி கட்ட பேட்ஸ்மேன்கள் ரியான் பராக் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஜோடி சேர்ந்து இந்திய அணி ஓரளவு நல்ல ஸ்கோரை அடைய உதவியினர். 105 ரன்கள் 7 விக்கெட்டுகள் இழந்த நிலையில் இந்த இருவரது பங்களிப்பு இந்திய அணியை 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் குவிக்க வைத்தது.
இதில் ரியான் பராக் 18 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர்களுடன் 26 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 18 பந்துகளில் 25 ரன்களும் குவித்தனர். இதனால் இந்திய அணி இலங்கை அணிக்கு 137 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருக்கிறது.
இதையும் படிங்க:கோலி கம்பீருக்கு இந்த விஷயத்துல உதவி பண்ணனும்.. அப்பதான் டீம் நல்லா இருக்கும் – ஸ்காட் ஸ்டைரிஷ் கருத்து
இலங்கை அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை சிறப்பாக விளையாடிய இலங்கை அணி வீரரும் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளருமான தீக்சானா 4 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஹசரங்கா இரண்டு விக்கெட்டுகளும், விக்கிரமசிங்கே மெண்டிஸ் மற்றும் அவிஷ்கா பெர்னான்டோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். வெற்றில இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்க உள்ளது.

