இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நிலையில் தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இது முடிந்த உடன் இந்திய அணி இலங்கை அணியோடு ஒரு நாள் தொடரில் மோத இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் விராட் கோலிக்கும், கௌதம் கம்பீருக்கும் இடையிலான உறவு எப்படி இருக்க போகிறது என்பது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
கௌதம் கம்பீர் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் போது புதிய பயிற்சியாளராக அறிமுகமானார். இந்த நிலையில் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஒரு நாள் தொடரில் இந்திய அணியோடு இணைய உள்ளனர். இந்த சூழ்நிலையில் விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு இடையான உறவு எப்படிப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும்.
ஐபிஎல் தொடரின் போது இருவருக்கும் இடையேயான சண்டை அனைவரும் அறிந்த விஷயமாகும். அதிலும் கடந்த 2023ஆம் ஆண்டு லக்னோ அணிக்காக கவுதம் கம்பீர் ஆலோசகராக செயல்பட்டு கொண்டிருந்தபோது விராட் கோலிக்கும், அவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இருப்பினும் இந்த ஆண்டு இருவரும் அதை முற்றிலும் மறந்து சமரசமாக பேசி சமாதானமாகிக் கொண்டனர்.
இந்த சூழ்நிலையில் பயிற்சியாளராக உள்ள கம்பீருக்கும் விராட் கோலிக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கும் என்பது குறித்து நியூசிலாந்து அணி வீரர் ஸ்டைரிஸ் கூறும்போது “கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இடையேயான உறவு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். யாரும் உட்கார்ந்து கொண்டு அவர்களுக்கிடையான உறவு குறித்து எதுவும் கூற முடியாது.
ஆனால் ஒன்று கௌதம் கம்பீர் இந்தியாவை வழிநடத்த நினைக்கும் விதத்திற்கு இளம் வீரர்களை இயக்க விராட் கோலியின் உதவி நிச்சயமாக தேவை.இந்த இரு வீரர்களுமே வெவ்வேறு மாதிரியான உணர்வை கொண்டவர்கள். இருவருமே முழு அதிகாரத்தை பெற்றிருக்கிறார்கள். எனவே அணிக்குள் இவர்கள் செயல்படும் விதம் குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க:ருதுராஜ் அல்லது கில்.. இந்திய அணிக்கு யார் தேவை.? இந்தியாவின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறும் சீக்ரெட்
ஆனால் அதற்கு முன்பாக இவர்கள் இருவருமே சிறந்த கிரிக்கெட் வீரர்கள். கிரிக்கெட் குறித்த நுண்ணறிவு இவர்களிடம் அதிகமாகவே உள்ளது. இவர்கள் இரண்டு பேருமே அணியின் செயல்பாட்டிற்கு ஒருவருக்கொருவர் உதவி கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல் இக்கட்டான சூழ்நிலைகளிலும் புத்திசாலியாக செயல்படுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.

