ருதுராஜ் அல்லது கில்.. இந்திய அணிக்கு யார் தேவை.? இந்தியாவின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறும் சீக்ரெட்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்று விளையாடி வரும் நிலையில், இந்த இரண்டு தொடர்களுக்குமே சுப்மான் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ருத்ராஜ், இந்த தொடருக்கு தேர்வு செய்யப்படாதது குறித்து இந்தியாவின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ருத்ராஜ் கெய்க்வாட்டை பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாமல், இந்திய அணியிலும் ரஞ்சி டிராபி சையத் முஸ்தாக் அலி டிராபி போன்ற பல்வேறு தொடர்களில் தொடர்ச்சியான பங்களிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு தனது திறமையை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

எனவே இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இவருக்கு இடம் கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், எதிர்பாராத விதமாக இந்திய அணியில் இருந்து இவர் கழட்டி விடப்பட்டுள்ளார். இந்த நிலையில் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்துள்ள சுப்மான் கில் இரு வடிவ கிரிக்கெட்டுக்கும் துணை கேப்டன் ஆக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது.

இதுகுறித்து இந்தியாவின் முன்னாள் வீரர் ராபின் உத்தபா தனது கருத்தை தெரிவிக்கும் போது “இந்திய அணியில் ருத்ராஜ் அல்லது கில் இருவரில் யாராவது ஒருவர் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். என்னைப் பொறுத்தவரை இந்த இரண்டு பேருமே இந்திய அணிக்கு முக்கிய தேவை. ஏனெனில் இவரது செயல் திறன்களை பார்த்தாலே இவர்களது தேவை நன்கு புரியும். ஆனால் இவர்களில் ஒருவரை தேர்வு செய்வது என்பது மிகவும் கடினமான காரியம்.

- Advertisement -

ருத்ராஜ் போல் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் பேட்ஸ்மேனை பார்க்க முடியாது. அதேபோல கில்லிடம் பவர் ஹிட்டிங் ஷாட்கள் இருக்கிறது. அதேபோல சில வித்தியாசமான பேட்டிங் நுட்பங்களையும் வைத்திருக்கிறார். இதனால் இந்திய அணியில் இருவரையுமே தேர்வு செய்வது நல்ல விஷயம் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க:ஹசரங்கா தான் ஒரு பும்ரானு நினைக்கிறாரு.. இந்த டீம்க்கு மகளிர் டீம் நல்லா விளையாடுறாங்க – விளாசும் பாசித் அலி

அதுமட்டுமல்லாமல் இருவருமே மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் மிகச் சிறப்பாக விளையாடக்கூடிய திறமையை கொண்டு இருக்கின்றனர். எனவே இந்த இருவரில் ஒருவர் என்பது என்னை பொறுத்தவரை மிகவும் கடினமான காரியம். இரண்டு பேருமே இந்திய அணிக்கு தேவை” என்று கூறி இருக்கிறார். கில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் வேளையில் ருத்ராஜ் எந்த இடத்தில் வேண்டுமானாலும் களமிறங்கி சிறப்பாக செயல்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles