ஹசரங்கா தான் ஒரு பும்ரானு நினைக்கிறாரு.. இந்த டீம்க்கு மகளிர் டீம் நல்லா விளையாடுறாங்க – விளாசும் பாசித் அலி

இலங்கை கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து மூன்றாவது போட்டியில் நாளை விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இலங்கை அணி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி தனது காட்டமான விமர்சனங்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இலங்கை அணி டி20 தொடரில் படு மோசமான தோல்விகளை சந்தித்ததை தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் பயிற்சியாளர் என அனைவருமே மாற்றப்பட்டு தற்போது புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் என புத்துணர்ச்சியோடு இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்கியது. பேட்டிங்கை பொருத்தவரை இலங்கை அணிக்கு தொடக்கம் நன்றாக இருந்த போதிலும் பின்னால் வரும் வீரர்கள் மோசமான பங்களிப்பை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

குறிப்பாக முதல் போட்டியில் 140 ரன்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்த இலங்கை அணி அடுத்த 30 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை அநியாயமாக விட்டுக் கொடுத்தது. அதேபோல இரண்டாவது போட்டியிலும் கடைசி ஐந்து ஓவர்களில் 31 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இரண்டு போட்டியிலும் இலங்கை அணி தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான பாசித் அலி இலங்கை அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன் டிராபி தொடருக்கு விளையாட தகுதியற்ற அணி என்று கூறி இருக்கிறார்.

இதுகுறித்து பாசித் அலி விரிவாக கூறும்போது “இலங்கை ஆல்ரவுண்டர் ஹசரங்கா தற்போது நம்பர் ஒன் வீரராக இருக்கிறார். ஆனால் கிரிக்கெட்டை விட அவர் பெரிய வீரராக நினைத்துக் கொண்டிருக்கிறார் என தோன்றுகிறது. பேட்டிங்கில் அவர் முதல் பந்திலேயே மிகவும் சுமாரான ஷாட் விளையாடி அவுட் ஆனார். அதேபோல பந்துவீச்சிலும் ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யா ஆகியோர் சிரமமின்றி அவரது பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடினர்.

- Advertisement -

ஹசரங்காவுக்கு ஆட்டநாயகன் விருது கொடுத்துவிட்டு அவருக்கு அடுத்த போட்டியில் ஓய்வை கொடுத்து விடலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் பேட்டிங்கில் மிக முட்டாள்தனமாக செயல்படுகிறார். அதேபோல தன்னை பந்துவீச்சில் பூம்பூம் பும்ரா என நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர் பந்துவீச்சில் ரவி பிஸ்னாயிடம் கற்றுக் கொள்ள வேண்டும். சாம்பியன்ஸ் டிராபி விளையாட முடியாமல் போனதற்கு இலங்கை தகுதியான அணிதான்.

இதையும் படிங்க:மூன்றாவது டி20 போட்டி.. இலங்கைக்கு எதிரான இந்தியாவின் உத்தேச பிளேயிங் லெவன்.. கம்பீர் செய்யப் போகும் மாற்றம்

பாகிஸ்தான் அணியை போலவே இலங்கை அணியும் தங்களது நட்பை தொடர விரும்புகிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. உண்மையில் அவர்களை விட சமீபத்தில் ஆசிய கோப்பை வென்ற இலங்கை மகளிர் அணி சிறப்பாக விளையாடி வருகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles