இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் மூன்றாவது டி20 போட்டி நாளை நடைபெற இருக்கிறது.
ஏற்கனவே இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் நாளை நடைபெற உள்ள போட்டியில் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என்று பார்க்கலாம்.
நேற்றைய போட்டியில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக துணை கேப்டன் கில் இடம்பெறாத நிலையில் அவருக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக சஞ்சு சாம்சன் களமிறங்கினார். இருப்பினும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத நிலையில் முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார்.
இருப்பினும் கம்பீர் சஞ்சு சாம்சனுக்கு சற்று அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதால் அடுத்த போட்டியில் ரிஷப் பண்ட் இடத்தில் அவர் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம் போலவே நாளைய போட்டியின் தொடக்க வீரர்களாக கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்குவார்கள். ஜெய்ஸ்வால் இனி வரும் டி20 தொடர்களில் அவரே இனி நிரந்தர தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார். இரண்டு போட்டிகளிலும் தனது திறமையை நிரூபித்துள்ள நிலையில், அவருக்கு இந்திய அணியில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.
ரிஷப் பண்ட் இடத்தில் சஞ்சு சாம்சன் களமிறங்கலாம். பகுதி நேர பந்துவீச்சாளராக இருந்தாலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ரியான் பராக் பேட்டிங்கில் கடந்த இரண்டு போட்டிகளில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அடுத்த போட்டியிலும் அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் தொடரிலும் அவர் இடம் பிடித்திருப்பதால் அவரை எதிர்கால வீரராகவே கௌதம் கம்பீர் பார்க்கிறார்.
இதனால் இனி வரும் தொடர்களில் வாஷிங்டன் சுந்தர் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு. பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஸ்தீப் சிங்குக்கு பதிலாக மற்றொரு இடது கை பந்து வீச்சாளரான கலீல் அகமது களமிறங்கலாம். கௌதம் கம்பீர் தான் பயிற்சியாளராக பொறுப்பேற்ற முதல் தொடரையே முழுவதாக வெல்ல நினைக்கும் நிலையில் பெரிய மாற்றங்கள் இருக்காது.
இதையும் படிங்க:இந்தியாவுக்கு துணிச்சல் இருக்கா? அப்ப இத செஞ்சு காட்டுங்க பாக்கலாம்.. தன்வீர் அகமது சவால்
இந்திய அணியின் உத்தேச பிளையிங் லெவன்: சுப்மன் கில், ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் பட்டேல், ரவி பிஸ்னாய், முகமது சிராஜ் மற்றும் கலீல் அகமது.

