சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிகத் தீவிரமாக செய்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் தன்வீர் அகமது இந்திய அணி குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சனை காரணமாக இந்திய அணி கடைசியாக 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்ற நிலையில் அதற்குப் பிறகு இந்தியா அங்கு சென்று விளையாடுவதில்லை. மேலும் ஆசிய கோப்பை அல்லது பெரிய ஐசிசி தொடர்கள் ஏதேனும் வரும் போது இந்தியா பாகிஸ்தான் அணியுடன் விளையாட வேண்டிய சூழ்நிலை இருந்தால் அந்த போட்டிகள் மட்டும் இலங்கை அல்லது துபாயில் நடைபெறும்.
ஆனால் பாகிஸ்தான் அணி இந்தியாவின் உலகக் கோப்பை போன்ற தொடர்களில் பங்கு பெற்று விளையாடி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பாகிஸ்தானின் பாதுகாப்பாற்ற சூழ்நிலை இருப்பதாகவும் இதனால் இந்திய அணி அங்கு சென்று விளையாட கூடாது எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் சென்ற விளையாடுவது குறித்து இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஹர்பஜன் சிங்கின் கருத்துக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தன்வீர் அகமது கூறும்பொழுது “சிங்கங்களாக இருக்கிறோம். பாகிஸ்தான் அணி வீரர்கள் சிங்கங்களாக இருக்கிறார்கள். நாங்கள் உங்களது நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட வந்திருக்கிறோம். அதேபோன்று நீங்களும் விளையாட வாருங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து தருகிறோம்.
நீங்கள் ஒரு முறையாவது இங்கு வந்து விளையாட வேண்டும். பாகிஸ்தான் அணி வெற்றி தோல்வி என்று எதையும் கருத்தில் கொள்ளாமல் இந்தியா சென்று விளையாடி வருகிறது. இதைத்தான் துணிச்சல் என்றும் பாகிஸ்தான் துணிச்சலான அணி என்றும் கூறுகிறோம். எனவே இந்தியாவிற்கு அந்த துணிச்சல் இருக்கிறதா? என்பதை காட்டுங்கள்” என்று தன்வீர் அகமது கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:உங்களால் இந்தியா டீமுக்கு பிரச்சனை வந்துரும்.. அதனால இந்த தப்பை செய்யாதீங்க – ரவி சாஸ்திரி பேட்டி
இந்தியாவின் கபடி மற்றும் டென்னிஸ் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு மட்டும் பாகிஸ்தான் சென்று விளையாடுவதை பிசிசிஐ மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய அணி பாகிஸ்தான் சென்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்குமா? அல்லது போட்டிகள் துபாயில் நடத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

