அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இந்த வருட இறுதியில் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்ள இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் ஐபிஎல் அணிகளுக்கு உள்ளாகவே சில கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக தகவல்கள் வெளி வருகின்றன.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும். இந்த ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட அணி தங்கள் அணியில் இருக்கும் வீரர்களில் நான்கு பேரை தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளித்தது பிசிசிஐ. மேலும் அது மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட வீரர் ஏலத்திற்கு வரும்போது அந்த அணியே அவரை ஆர்டிஎம் கார்டு மூலம் திரும்ப வாங்கிக் கொள்ளலாம்.
இதன்படியே தற்போது வரை ஐபிஎல் ஏலம் நடத்தப்பட்டு வந்தது. இதனால்தான் சென்னை அணியில் மகேந்திர சிங் டோனி மற்றும் ஜடேஜா போன்ற வீரர்களும் மும்பை அணியில் ரோஹித், ஹர்திக் பாண்டியா, பும்ரா போன்ற வீரர்களும் பெங்களூரு அணியில் விராட் கோலி போன்ற வீரர்களும் இருக்கிறார்கள். ஆனால் இப்போது ஐபிஎல் அணிகள் இடையே பல்வேறான கருத்துக்கள் நிலவுவதாக கூறப்படுகிறது.
தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி சில அணிகள் தங்களது அணிகளில் ஐந்து முதல் ஏழு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறது. மேலும் சில அணிகள் எட்டு வீரர்கள் வேண்டும் எனவும், சில அணிகள் எந்த விரலையும் தக்க வைக்க அனுமதி அளிக்கக் கூடாது எனவும் கூறி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சில அணிகள் தக்கவைப்பு வேண்டாம் ஆர்டிஎம் மூலம் வீரர்களை எடுத்துக் கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறது.
இப்படி அணிகளுக்கு உள்ளாகவே இப்படி கருத்து வேறுபாடுகள் நிலவும் நிலையில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் குறிப்பிட்ட அணிகளில் சில வீரர்கள் எப்போதுமே தக்கவைக்கப்படுவார்கள்.
இதையும் படிங்க:தோனி ஃபேன்ஸ் ரெடியா.. தல தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்
எடுத்துக்காட்டாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி, ருத்ராஜ் மற்றும் ஜடேஜா ஆகியோர் இருப்பார்கள். மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, சூர்யா குமார் யாதவ், மற்றும் பும்ரா ஆகியோர் இருக்க பெங்களூர் அணியில் விராட் கோலி மற்றும் வில் ஜாக்ஸ் இருவரும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் அணியில் வேண்டுமானால் குறிப்பிட்ட இரண்டு வீரர்களை தவிர்த்து அந்த அணி மொத்தமாக வீரர்களை மாற்ற முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

